ஊழின் நிரடல் – இதயசகி

நகாசு அற்ற உரையாடலின்
சாத்தியக் கூறுகளுக்காக
தவமிருந்த செவிகளை
புள்ளின வலசையின்
உள்தூண்டல் மொழியோடே
பிணைத்து மரிக்கின்றேன்!

சிவிகையில் உலாவும்
சாக்காடின் நெறி வழுவாத
அணைப்பின் இறுக்கத்தை
புலிக் கண்டு விரைந்தோடும்
மானின் தேகச் சூட்டிலே
கதகதத்து முகிழ்க்கின்றேன்!

மரித்தலுக்கும் முகிழ்த்தலுக்கும்
இடையே யாருமற்று கிடக்கும்
ஒரு பிடி வாழ்க்கையின்
காலப் பருக்கைகளை
நொறுங்கத் தின்றுத் தீர்க்கவே
கூப்பாடுப் போடுகின்றேன்!

7 Replies to “ஊழின் நிரடல் – இதயசகி”

Comments are closed.