மகரந்தம்

மூளை முணுமுணுப்பின் மொழி

பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவியல் பாய்ச்சலுக்கு இணையாக அண்மைக்காலங்களில் ஒன்றிருந்தால் அது நரம்பியல் துறையில் ஏற்படும் வளர்ச்சியைத்தான் சுட்டிக்காட்டமுடியும். மூளை மற்றும் நரம்பு தொடர்புகொள்ளும் மின் தொடர்பு செய்தி பரிமாற்றத்தைப் புரிந்துகொள்ள பல ஆய்வுகள் நடக்கின்றன. நம் உறுப்புகளுக்கு மூளைக்கும் இருக்கும் இணைப்பை நாம் முழுவதாகப் புரிந்துகொண்டுவிட்டாலும், அவற்றிடையே நடக்கும் பரிமாற்றத்தை கடத்துவதன் மூலம் மூளை மட்டுமே உயிரோடு இருக்கும் நோயாளிகளோடு நாம் தொடர்பு கொள்ள முடியும். கோமா, பக்கவாதம் போன்றவற்றால் வெளி உலகத் தொடர்பை இழந்துவிட்டவர்களோடு மீண்டும் பேச முடியும் என்பது எத்தனைப் பெரிய மாற்றம் என்பதை நாம் சொல்லத்தேவையில்லை. கலிபோர்னியா மாநிலத்தின் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யும் டாக்டர் சாங் அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருக்கும் நரம்பியல் நோயாளிகளிடம் சில கேள்விகளைக் கேட்டு அவர்களது மூளையில் பதிலாக முளைக்கும் மின் மாற்றங்களைத் தொகுத்து ஆய்வு செய்திருக்கிறார்கள். தொடர்ந்து நரம்பு மண்டலத்தை இப்படிப்பட்ட ஆய்வு மூலம் சோதித்ததில், கேள்விக்கான பதிலை மூளையில் நடக்கும் மாற்றங்களைக்கொண்டே புரிந்துகொள்ளும் மொழியை உருவாக்கியுள்ளனர். இதைக் கொண்டு பல நோயாளிகளைச் சோதனை செய்ததில் அவர்கள் மூளையில் பதியப்படும் உரையாடல்களுக்கான பதில்களை நாம் உடனுக்குடன் புரிந்துகொள்ளும் வழிமுறைகளையும் தொழிற்நுட்பத்தையும் உருவாக்கி வருகிறார்கள். கடந்து வரும் மறைந்துபோன ஸ்டீபன் ஹாக்கிங்கின் நரம்பு வழிச்செய்திகளை அவரது முகத்தின் தசைகள் அசைவதைக்கொண்டு அறிந்துகொள்ளும் மொழிகடத்திகளை உருவாக்கியதைத் தாண்டி நேரடியாக மூளையின் செய்திகளைப் புரிந்துகொள்ளும் தொழில்நுட்பமாக இது வளர்ந்துள்ளது. மனிதர்கள் சிந்திப்பது அனைத்தையுமே நாம் கேட்டுவிட முடியுமா என சில ஆய்வாளர்களை இந்த ஆய்வின் நோக்கத்தை சந்தேகித்தாலும், இதன் மூலம் மூளை இறக்காத கோமா நோயாளிகளோடும், பக்கவாதத்தால் பேச்சு இழந்தவர்களுடனும் உரையாட முடியும் என்பது எத்தனை பெரிய வரப்பிரசாதம் !
https://www.theguardian.com/science/2019/jul/30/neuroscientists-decode-brain-speech-signals-into-actual-sentences

*

ஆவிஊட்டளவு

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத் தேவையான திட்டங்களை அரசும் தனியார் அமைப்புகளும் தொடர்ந்து செய்து வருகின்றன என்றாலும் அவற்றின் பலனை முழுமையாக அனுபவிக்கிறோமா என்பது சந்தேகமே. பொது மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுக்காப்புக்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்றாலும் அதைச் சரியான முறையில் செய்வது பற்றி அறிவு இப்போதும் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. அதற்குப் பல காரணஙகள் இருந்தாலும் நமக்கு இயற்கை பற்றிய பாரம்பரிய அறிவும், புரிதலும் குறைவு என்பது முதன்மையானக் காரணம். காடுகளை அமைப்போம், ஒரு கோடி மரங்கள் நடுவோம் போன்ற திட்டங்களால் முழுமையான பாதுகாப்பை அளிக்க முடியாது என இந்த ஆய்வு சொல்கிறது. நிலத்தடி நீர் ஆவியாகிப்போவது போல மரங்களும் செடிகளும் கார்பன், நீர் போன்றவற்றை ஆவியாக்குகிறது. நிலத்தடி நீர் ஆவியாவதன் அளவும் செடிகளிலிருந்து ஆவியாகும் கார்பனின் அளவும் சரியான விகிதத்தில் இருக்கும்போது குறுங்காடுகள் க்ரீன் ஹவுஸ் எனப்படும் பசுமைக்குடிலாக மாறும் சாத்தியம் உள்ளது. மரம் செடி கொடிகள் மட்டுமல்ல மண்ணின் தன்மையும், கனிமத்தன்மையும் மிக இன்றியமையாதது எனச் சொல்லும் ஆய்வை இங்கு படிக்கலாம்.

https://vigyanprasar.gov.in/isw/Trees-not-a-silver-bullet-to-mitigate-climate-change.html

*

வாயேஜரின் பயணம்!

முப்பது வருடங்களுக்கும் மேலான ஓர் காலகட்டத்தில் எத்தனை அதிகபட்சம்  மனிதனால் சாதித்துவிடமுடியும்? சூரிய வளி மண்டலத்தை, பூமியிலிருந்து நான்கு மில்லியன் மைல் தூரத்தைத்தாண்டிவிடக்கூடிய விண்கலம்?

ஆம்..!

1977ல் நாஸாவால் செலுத்தப்பட்ட பதினெட்டு நாட்கள் இடைவெளியில் ஒரு ஆளில்லா விண்கலங்களின் பெயர், mariner 11 and Mariner 12.  இவ்விரு விண்கலங்களின் முதன்மை நோக்கம்,வியாழன், சனி கிரகங்களை ஆராய்வது. இவற்றின் பெயர்கள் பின்னர் Voyager2 மற்றும் Voyager1 என்று மாற்றப்பட்டன. எத்தனை பொருத்தம்!

வருடம் 79ல் வியாழன்;81ல் சனி கிரகத்தை தாண்டி நெடுடுடும் பயணத்தை தொடர்ந்து வருடம் 86ல் யுரோனஸ்ஸைக் கடந்து வருடம் 89ல் நெப்டுயூன்!

இம் நெடும் பயணத்திற்கான அணிகளில் வேலை செய்த விஞ்ஞானிகளின் பார்வையில்  கீழ் கண்ட ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

https://www.bbc.co.uk/programmes/b09gvnty

சூரிய மண்டலத்தின் விளிம்பை நெருங்கி intersteller space என்ற, நட்சத்திரங்களுடையிலான வெற்றிடத்தை அடைவதற்கு முன் திரும்பி, சூரிய குடும்பத்தை, புதன், பூமி, வியாழன், சனிசனி,யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களை இக்கலங்கள் படங்கள்புகைப்படங்கள் எடுத்தன.  நான்கு பில்லியன் மைல்கள் (6 பில்லியன் கிலோமீட்டர்கள்) தொலைவிலிருந்து கடைசி முறையாகசூரிய குடும்பத்தை நோக்கி எடுத்த புகைப்படங்கள் விண்வெளி பயணத்தின் ஓர் மகத்தான மானுட மைல்கல்.

வருடம் 2012ல் Voyager 1 மற்றும் வருடம் 2018ல் Voyager 2 சூரிய குடும்பத்திலிருந்து வெளியேறி ஓர் “மாபெரும் வெற்றிடத்தில்” போய்க்கொண்டிருக்கின்றன.

இதுவரை மனிதனால் செய்யப்பட்ட கலங்கள் இத்தனை தூரம் சென்றதே இல்லை…

இக்கலங்கள் சில சுவாரசியமான விஷயங்களை கொண்டிருக்கின்றன. கார்ல் சாகன் தலைமையிலான ஓர் குழு,115 படங்கள், ஐம்பந்தைந்து மொழிகளில் “ஏலியன்”களுக்கான முகமன்கள்,பல்வேறு விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரனங்களின் ஒலிகளின் தொகுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

என்றாவது ஒரு நாள், ஏதோ ஓர் எதிர்கால கணத்தில் இக்கலங்கள் வேறு ஏதாவது  “உயிரிகளால்” கண்டெடுக்கப்படுமானால் அவர்களுக்கான தொகுப்பு இவை!

இக்கலங்களுக்கு இன்னும் ஓர் பத்தாண்டுகள் போல “உயிர்” இருக்கும். அதற்கப்புறமும் இவை மாபெறும் வெற்றிடத்தில் உலவிக்கொண்டிருக்கப்போகின்றன.

இந்த ஆவணப்படத்தில் Voyager புராஜக்ட் விஞ்ஞானிகள், 77ல் இளமையாக இருந்து  இன்று கிழவர்கள் பாட்டிகள் ஆகிவிட்டவர்கள் தங்கள் அனுபவங்களைச் சொல்கிறார்கள். நெப்டியூனின்நீல வண்ண பந்தைப் பார்த்த பெண் விஞ்ஞானியின் குரலில்தான் எத்தனை ஆச்சரியம், குதூகூலம்!

இத்தனை பெரிய சூரிய குடும்பத்தில், இத்தனை கிரகங்களில் நாம் மட்டுமே, இப்புவி மட்டுமே உயிரினங்கள் வாழக்கூடியது…நாம் இன்னும் தனிதான், unique உயிரி…ஆச்சரியம் மற்றும்மெல்லிய திகிலைக்கொடுக்கிறது இந்த எண்ணம்…

https://voyager.jpl.nasa.gov