சோவியத் பேரரசு
வீழ்ந்த வருடத்தின்
அடுத்த வருடத்தில்
அந்நாளில்
ஹாலந்தின்
ஹோயாக்குக்குச்செல்லும்
பயணப்படகின்
அறையை பகிர்ந்துகொண்டேன்
ஒரு லாறி ஓட்டுனர்
வுல்வெர்ஹாம்ப்டனிலிருந்து.
அவனோடு இருபது
பேர்
வருடங்கள்
கடந்துபோன லாறிகளை
ரஷ்யாவுக்கு எடுத்துச் சென்றனர் ஆனால்
அதை தவிர்த்து
அவனுக்கு தாங்கள் எங்கு
தலைப்பட்டிருக்கிறோம் என்று
ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.
குழுத் தலைவன் கட்டுக்குள் வைத்திருந்தான்
என்னவென்றாலும் அது
ஒரு சாகசம்
நல்லபணம் எல்லாம்
அந்த ஓட்டுனர் சொன்னான்
மேல் தட்டுப் படுக்கையில்
தங்க ஹால்பர்ன் ஒன்றைப் புகைத்துக்கொண்டே
தூங்கப் போகும் முன்.
என்னால் இன்னும் கேட்க முடிகிறது
அவன் மெலிதாக குறட்டை விடுவதை
இரவு முழுவதும்,
விடியலில் அவனைப் பார்க்கமுடிகிறது
ஏணியில் கீழே
இறங்குகிறான்: பெரிய வயிறு
கறுப்பு உள்ளாடை
அணிகிறான் அவனது மேல்
சட்டையை, பேஸ்பால்
தொப்பியை, போட்டுக்கொள்கிறான்
ஜீன்ஸ் & விளையாட்டுக் காலணிகளை
ஜிப்பை இழுத்துவிடுகிறான் அவனது
பிளாஸ்டிக் பயணப்பையை,
தடவிக்கொள்கிறான் முடிதுளிர்த்த
முகத்தை அவனது இரு
கரங்களால் தயார்
அப்பயணத்திற்கு.
நான்
ரஷ்யாவில் குளித்துக்கொள்வேன்
அவன் சொன்னான். நான்
இங்கிலாந்தின் சிறந்த
வாழ்த்துக்களை அவனுக்குச் சொன்னேன். அவன்
பதிலளித்தான் உன்னை
சந்தித்து நன்றாயிருந்தது மேக்ஸ்.
***
ஸீபால்டின் கவிதையின் மொழியாக்கம்: சிறில் அலெக்ஸ்