1.
பெரிய சங்கடத்தையும்
சிறிய மகிழ்ச்சியையும்
தந்து விட்டுப் போனது
நேற்றைய பெருமழையில்
உடைந்த ஓடுகளில்
கொட்டிய சிற்றருவிகள்
கணவனுடன் நீ
ஊர்த் திருவிழா வந்து போனதைப் போல
2.

செலவுகளையும் வரவையும்
கடன்களையும் கவலைகளையும்
மனதினுள் கூட்டிக் கழித்தவாறே
கண்மூடிக் கிடக்கிறேன்
மேல் சுழலும் மின்விசிறியை
வெறித்தவாறே தூங்காத குழந்தை
என்னருகில் …
என்ன யோசித்து கொண்டிருப்பான்
3.
எல்லா நிகழ்ச்சி நிரலையும்
கலைத்துப் போட்டு விட்டது
இரண்டு நாட்கள் முன்னரே வந்து