
அவன் முன்பின் நகரமுடியாத
இக்கட்டில் மாட்டியபோது சரியாக அச்சொல்லை எய்ய இவனைத் தூண்டி
அவன் குருதியைக் கொப்பளிக்க வைத்தேன்
சொல் தைத்துப்பெற்ற
தீந்துயரை
திரும்ப அளிக்கக் காத்திருந்து
பிடுங்கப்பட்ட அதேசொல்லை
எறிந்தான் இவனை நோக்கி
எளிய வழியில்
எதிரிக்கு வெந்நோவை அளிக்க பாவனை செய்கிறான் இவன்
வலிக்காதது போல
தாம் பெற்ற அதே துயரை
அளிக்கவில்லையோ
குருதி பொங்குமிடத்திலன்றி கசியமிடத்தில் செலுத்தப்பட்டதோவென்ற
ஐயத்துடன்
ஆயத்தமாகிறானவன்
மீளச் செலுத்த
முடிவிலாது தொடரப்போகும் வஞ்சத்தை உண்டாக்கியபின்
என்ன வேலையிங்கே …
கிளம்பினேன்
அடுத்த இடம் நோக்கி
அருமை.
great
சிறப்பு