அவளுக்கென பிரத்யேகமான
மூலக்கூறுகளுடன்
துளித்துளியாய்
மனதினுள் ஊறி
தளும்பும் பிரியத்தை
மறுத்தால் என்செய்வது …
பிறருக்கு வழங்கலாமெனில்
ஏற்கனவே பெறுகிறார்கள் அவரவரின் கொள்கலனுக்கேற்ப ..
புதியவருக்கென யோசித்தால்
தனித்தன்மையுடையதை
எப்படி ….

துளிர்க்கும் ஊற்றுக்கண்ணை
வெறுப்பின் இருண்மை கொண்டு அடைக்கலாமெனில்
அதன் தொழில்நுட்பம்
கைவரப் பெறவில்லை….
பிரியத்தை மறுக்காதீர் என
அவளிடமே இரக்கவும் மனமில்லை…
தளும்பியபடி
உறைந்து கிடக்கிறது
அவளால் பெறப்படாத
என் பிரியம்…
எல்லா காதல்களும்
இடந்தேடி அலைந்தால்
பூமியில் பகலில்லை
இரவுக்கும் பணியில்லை
ஏகாந்தம்
ஆதிமனம் எங்கும் எதிலும்.