உண்டியலின் மேல் சிறு இறகு

உலகம் விரைவில் அழியப்போகிறதென
யார் யாரோ சொன்னபோது
நம்பாதவன் ,

எப்போதாவது கேட்க
வாய்க்கிற
குயிலின் கூவல்
எதிர்க்குரலின்றி
ஒற்றைத்  கூவலாய்
என் துயரெனவே  ஒலிக்கும்போது

சொல்லிக் கொள்கிறேன்
நிச்சயமாக என …

**

எந்தப்பறவை
என்ன பிரார்தனைக்காக
தன் சிறுஇறகை
உண்டியலின்மேல்
காணிக்கையாக வைத்து
வேண்டிக்கொண்டதோ….
நானும் பிரார்த்திக்கிறேன் அவ்வேண்டுதல் நிறைவேற..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.