[stextbox id=”info” caption=”மின்வெளிக் குற்றம்”]
ஜூன் 27, 2017 அன்று உலகின் பல பகுதிகளில் உள்ள கணினிகளும் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகின. அவற்றில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டு, அவை வெகு விரைவில் செயலிழக்குமுன் வைரஸ்கள் அவற்றுடன் தொடர்பில் இருந்த பிற கணினிகளுக்கு தொற்றிக் கொண்டன. ருஷ்ய அரசு இது போன்ற வைரஸ்களை உக்ரைனின் பொருளாதாரக் கட்டமைப்பின் மீது ஏவி விடுவது வழக்கம்தான், தொடர்ந்து இரு ஆண்டுகள் கடும் குளிர் காலத்தில் இந்த வைரஸ்கள் உக்ரைனின் மின் சக்தியை வெட்டி அதை இருளிலும் குளிரிலும் தவிக்க விட்டிருக்கின்றன. உக்ரைனை தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் இம்முறை ஏவப்பட்ட வைரஸ்கள் மருத்துவமனைகள், மின்சார நிறுவனங்கள், விமான நிலையங்கள், வங்கிகள், வங்கிச் சேவைகள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு அமைப்புகளையும் செயலிழக்கச் செய்தன. மொத்தத்தில் உக்ரேனில் இருந்த கணினிகளில் பத்து சதவிகிதம் தாக்குதலில் பாதிக்கப்பட்டன. இந்த கணினிகளுடன் தொடர்பில் இருந்த பிற தேசங்களில் கணினிகளுக்கும் தோற்றிய வைரஸ்கள் துவக்க மணி நேரங்களிலேயே அமெரிக்காவில் பென்சில்வேனியா மருத்துவமனைகள் முதல் டாஸ்மேனியாவில் சாக்லேட் பாக்டரிகள் வரை பரவின. இதில் பன்னாட்டு நிறுவனங்களான மேர்ஸ்க், மெர்க், பெட் எக்ஸ், செயிண்ட் கோபைன், மொண்டேலே, ரெக்கிட் பென்கிஸர் போன்றவையும் அடக்கம். இவை ஒவ்வொன்றும் ஒன்பது இலக்க நட்டத்தைச் சந்தித்தன, உலகளாவிய இழப்பு கிட்டத்தட்ட 1000 கோடியாக இருக்கலாம். இந்த நிறுவனங்களில் ஒன்றான மேர்ஸ்க் இந்த தாக்குதலை எவ்வாறு எதிர்கொண்டது என்பதை இந்தக் கட்டுரை சுவாரசியமாக விவரிக்கிறது
https://www.wired.com/story/notpetya-cyberattack-ukraine-russia-code-crashed-the-world/
இணையத் தொடர்பில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பான தூரம் என்பது கிடையாது என்ற படிப்பினை கொண்ட இந்தக் கட்டுரை மிகச் சுவாரசியமான ஒன்று.
[/stextbox]
[stextbox id=”info” caption=”பணம் சார் பொருளாதாரம்”]
இந்தியாவில் பண வீக்கம் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது- ஆறு அல்லது எட்டு சதவிகித பணவீக்கம் ஆட்சிகளைக் கவிழ்த்துவிடக் கூடியது என்று நமக்குத் தெரியும். இப்படியொரு நிலையை நினைத்துப் பார்க்க முடியுமா?- வெனசூவேலாவில் பணவீக்கம் 82,700 சதவிகிதம் என்ற நம்ப முடியாத உயரத்தைத் தொட்டிருக்கிறது. ஒரு கிலோ தக்காளி, கேரட், அரிசி, ஒரு டாய்லட் பேப்பர் ரோல், ஒரு பார் சோப் வாங்க பணக்கத்தைகளை அடுக்கி வைக்க வேண்டியிருக்கிறது – இங்குள்ள புகைப்படங்களைப் பாருங்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சியில் தோன்றி அமெரிக்காவுக்கே மிரட்டல் விட்டுக் கொண்டிருந்த சாவேஸின் தற்கொலைவெறி பொருளாதார கொள்கைகள் இன்று அந்த தேச மக்களில் 7-13 சதவிகிதத்தினரை அண்டை நாடுகளுக்கு அகதிகளாய் அனுப்பி வைத்திருக்கிறது. முட்டாள் அதிபர்களுக்கு எந்த இயமும் கிடையாது என்றாலும் இந்த விஷயத்தில் வெனிசூயலாவின் கதி சோஷலிசத்தின் முகத்தில் இன்னொரு கரும்புள்ளியைக் குத்தி விட்டது. ஆனால் எதிரிகள் அவசரப்பட்டு மகிழ வேண்டாம், முதலியத்தின் முகத்திலும் இது போன்ற செம்புள்ளி குத்தப்படும் நாள் தொலைவில் இல்லை- சாவேஸுக்கு இணையான ஆகிருதி அமெரிக்க வெள்ளை மாளிகையில் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறார்.
https://widerimage.reuters.com/story/venezuelans-rush-to-shops-before-monetary-overhaul
[/stextbox]
[stextbox id=”info” caption=”வறட்சித் தாங்கும் திறன்”]
“முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு பிடி சாம்பராய் வெந்து மண்ணாவது” என்று ஆன்மிகம் பேசிக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் புவி வெப்பமயமாக்கம் பட்டினத்தார் தாயுமானவரை எல்லாம் பிச்சை எடுக்க வைக்குமளவு மிரட்டலான எதிர்காலத்தை உத்திரவாதம் அளிக்கிறது என்று கண்டுகொண்டபின் எங்கே ஆரம்பித்தாலும் இங்கே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார். எல்லாம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்று நம்ப விரும்புபவர்கள் மரணிக்கத்தக்க மலை புவி வெப்பமயாக்கம், ஒரு துளி நம்பிக்கைக் கீற்றுக்கெல்லாம் இடமில்லாத இடத்துக்கு நிறைய பேர் போயாகி விட்டது. அவர்கள் மற்றும் நண்பர்களுக்கு, “அப்பவே சொன்னேன்,” என்ற சந்தோஷத்தை தரும் செய்தி இது- “மத்திய ஐரோப்பிய வறட்சியில் செக் குடியரசில் உள்ள ஆற்றில் உள்ள எச்சரிக்கைப் பாறை வெளிப்பட்டது”. அந்த நதியில் நீர் வற்றும்போது வெளிப்படும் இந்தப் பாறையில் வறட்சி நிலவிய ஆண்டுகளை காலங்காலமாக அதன் மக்கள் குறிப்பிட்டுக்கிறார்கள்: 1900க்கு முன், 1417, 1616, 1707, 1746, 1790, 1800, 1811, 1830, 1842, 1868, 1892, and 1893 ஆகிய ஆண்டுகளில் அறுவடை பொய்த்தது, உணவுப் பஞ்சம், விலைவாசி உயர்வு, மற்றும் ஏழை மக்கள் பட்டினி என்று குறித்து வைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டும் இப்பாறை தலைகாட்டியிருக்கிறது. ஒரு நாம் நினைப்பது போல் இல்லாமல் வழமையாகவே மாபெரும் வறட்சிகளால் பாதிக்கப்பட்ட பகுதிதான் ஐரோப்பா. வரலாறு திரும்புகிறது, ஆனால் இப்போது இன்னும் கொஞ்சம் அதிகமாக!
[stextbox id=”info” caption=”காலநிலைமாற்றம்”]
பூமி வெப்பமேறி வருவதை கண்காணிக்கும் அறிவியல் பலவிதமான விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. புதுவித திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் புது சோதனைகளுக்கு நிதி ஒதுக்கவும் இது போன்ற போலி செய்திகள் பயன்படுகின்றன என ஒரு சிலர் கூறினாலும், உலகமெங்கும் வெப்பம் ஏறுவதற்கு பலவிதத் தரவுகள் கிடைத்தபடி இருக்கிறது. சமீபத்தில் ஆர்டிக் பகுதியில் பனிக்கட்டி உருகியதால் வடக்கு கிரீன்லேண்ட் பகுதியில் நீர் அளவு அதிகமாகியுள்ளது. இதுவரை நடந்திராத இந்த நிகழ்வு இந்த வருடம் மட்டும் ரெண்டு முறை நடந்திருக்கிறது. அபாயகரமான நிகழ்வாக விஞ்ஞானிகளால் கருதப்படும் இந்த நிகழ்வு பூமி வெப்பமாவதைப் பற்றிய புது தகவல்களை அளிக்கும் என நம்புகிறார்கள்.
https://www.theguardian.com/world/2018/aug/21/arctics-strongest-sea-ice-breaks-up-for-first-time-on-record
[/stextbox]