சின்ன பொம்மைகளை வீட்டில் கொலு வைப்போம். பாரதி கெர் (Bharti Kher) பொது இடத்தில் பதினாறடிக்கு சிலை எழுப்பி கண்காட்சியில் வைத்திருக்கிறார். லண்டனில் உள்ள ரீஜண்ட் பூங்காவில் இந்த வடிவம் இடம்பெற்றிருக்கிறது.
இந்தியாவில் பிறந்து பாதி வாழ்க்கையை கழித்திருந்தாலும் லண்டனில் இப்போதைய பாதி இருப்பதை இது குறிக்கலாம் என்கிறார். கடவுளிடம் உங்கள் கோரிக்கைகளை கொண்டு செல்லும் குடும்பத்தில் இருந்து வருவதால், பாதி கடவுளாக ஆனவர்களையும் இது குறிக்கலாம் என்கிறார் பாரதி கெர்.