மகரந்தம்

21ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்

அடுத்து என்ன வரப் போகிறது? மனித இனம் தாக்குப் பிடிக்குமா? நம் குடும்பம் எப்படி வரப் போகும் பிரளயத்தில் இருந்து தற்காத்து காப்பாற்றிக் கொள்ளும்? இதுதான் பெரும் பணக்காரர்களின் கவலை + கேள்வி. இதற்கான விடைகளையும் நடக்கவிருக்கும் சாத்தியங்களையும் யுவல் நோவா ஹராரி (Yuval Noah Harari), தன்னுடைய அடுத்த புத்தகமான 21 Lessons for the 21st Century-இல் ஆராய்கிறார். இந்தப் புத்தகம், அவரின் முந்தைய நூல்களான Sapiens: A Brief History of Humankind, மற்றும் Homo Deus: A Brief History of Tomorrow-வின் தொடர்ச்சியாக இருக்கிறது. அந்த நூலைக் குறித்த அறிமுக விமர்சனத்தை இங்கே வாசிக்கலாம்:

https://www.ft.com/content/6525c282-9aec-11e8-9702-5946bae86e6d

~oOo~

சாகாவரம்

மன்னர்களுக்கு மரணத்தின் மீது பயம் இருக்கிறது. அவர்களுக்கு இறந்த பின்னும் சொகுசான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் ஆசை இருக்கிறது. தாங்கள் புதையுண்ட இடத்தில் விதவிதமான வீரர்களின் பொம்மைகளை குவித்திருக்கிறார்கள். மாய மந்திர மூலிகைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மீளாத்துயில் கொள்ளும் இடத்தை அமர்க்களமாக வடிவமைக்கிறார்கள். சாவு என்னும் வார்த்தையைக் கேட்பதற்கே அஞ்சி நடுங்குகிறார்கள். பொ.ஆ.மு. 400ஆம் ஆண்டில் வாழ்ந்த ஷின் ஷுவாங் குறித்த கட்டுரையில் அந்தக் கால நம்பிக்கைகளையும் ராஜாக்களை புதைப்பதில் உள்ள வழிமுறைகளையும் அறியலாம்.

https://www.laphamsquarterly.org/roundtable/art-not-dying

~oOo~

டைனோசாரை யார் கொன்றார்கள்?

காலம் காலமாக நமக்கு சில விஷயங்கள் சொல்லித் தரப் படுகின்றன. வானத்தில் இருந்து எரிகல் வந்தது. அந்த சிறுகோள் மெக்சிகோ அருகே முழு வேகத்துடன் வீழ்ந்தது. அடித்த வேகத்தில் பூமியெங்கும் பற்றி எறிந்தது. தீயினால் பூகம்பம் ஏற்பட்டது. நில நடுக்கத்தினால் சுனாமி வந்தது. உலகெங்கும் இருண்டு கிடந்தது. எல்லா டைனோசார்களும் இறந்தன. இதை ஓரளவு ஆராய்ச்சிபூர்வமாக நிரூபித்துள்ளனர். ஆனால், ஒரேயொரு நிகழ்வு எப்படி பூமியெங்கும் சிதறிக் கிடந்த அனைத்து ஜந்துக்களையும் ஒரே வாரத்தில் செத்து மடிய வைக்கும்? கடவுள் பூமியைப் படைத்த மாதிரி என்று மதநூலில் சொல்வது போல் அறிவியலாளரும் கற்பனை செய்யலாமா என்பதை மற்றொரு ஆராய்ச்சியின் மூலம் இந்தக் கட்டுரை விரிவாக ஆராய்கிறது. இந்தியாவில் நடந்த எரிமலை வெடிப்பும் அதன் தொடர்ச்சியான பின் விளைவுகளும் எத்தனை ஆண்டு காலம் நீடித்தது என்பதையும்; ஹைதராபாத் முதல் இமாலயம் வரை பயணம் செய்த அனுபவங்களையும் கெர்ட்டா கெல்லர் (Gerta Keller) பகிர்கிறார்.

https://www.theatlantic.com/magazine/archive/2018/09/dinosaur-extinction-debate/565769/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.