[stextbox id=”info” caption=”அல்காரிதம்”]
உங்கள் நாட்டில் சுயாட்சி நடக்கிறது. தன்னாட்சியுடைய சமுதாயத்தில் இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத ஏதோவொன்றின் மீது பிழை கற்பித்து பழி போடுவோம். அதை மூன்று புத்ததகங்கள் கொண்டும், தற்காலத்தில் அல்காரிதம் நிர்ணயிக்கும் முடிவுகளைக் கொண்டும் இந்தக் கட்டுரை ஆராய்கிறது. இயற்கையின் விதி என்றோம்; கடவுள் வகுத்த வழி என்றோம்; வரலாற்றின் சதி என்போம்; ஏதோவொரு காரணத்தைக் கற்பிக்கிறோம். இதே போல் கணினி நிரலியும், தன் முடிவுகளுக்கும் நிர்ணயங்களுக்கும், நம்மால் எழுதப்பட்ட சட்டதிட்டங்களைக் கொண்டு நெறிப்படுத்தி மனிதரின் வாழ்க்கையை திசைதிருப்புகிறது. இந்த மாதிரி வினைச்சரம் அமைத்த நுண்ணறிவுப் பாதை எப்படி இருக்கும்?
https://mondediplo.com/outsidein/will-ai-make-society-obsolete
[/stextbox]
[stextbox id=”info” caption=”தீவினையின் தோற்றுவாய்”]
நாம் எவ்வளக்கு எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறோமோ, அவ்வளக்கு அவ்வளவு வன்முறையாளராகவும் இருக்கிறோம். இதனால்தான் நம்மால் இந்த அகிலத்தை ஆள முடிகிறதா? இருந்தாலும் சாதாரண மனிதரால் எப்படி இவ்வளவு பெரிய கொடூரத்தில் இறங்கி குரூரமாக செயல்படமுடிகிறது? மூர்க்கமாக அடாவடி அடித்து, பிறருக்கு தீங்கிழைக்க வைப்பது எது? நரம்பு இயங்கியலுக்கும் பொல்லாமைக்கும் எப்படி தொடர்பு உள்ளது? ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் யூதர்களைக் கொன்று குவித்தது நமக்கு தெரியும். அவ்வாறு குழுவாக இயங்கும்போது, சாமானிய பிரஜைகளாக இருந்தவர் எல்லோரும், எப்படி கும்பலாக கை கோர்த்து கயவர்கள் ஆக உருமாறித் திளைத்தார்கள்? மனசாட்சியற்று கூசவைக்கும் செயல்களுக்கான, இழிவான துன்மார்க்கத்தில் அனைவரும் எவ்வாறு இணைந்துகொள்கிறார்கள்? இந்தக் கட்டுரை ஆராய்ந்து விடை காண முயல்கிறது
https://aeon.co/essays/is-neuroscience-getting-closer-to-explaining-evil-behaviour
[/stextbox]