ஜாய் வில்லியம்ஸின் “கடவுளைப் பற்றிய 99 கதைகள்”

ஜாய் வில்லியம்ஸின் “கடவுளைப் பற்றிய 99 கதைகள்” (99 Stories of God) தொகுப்பிலிருந்து மூன்று கதைகள்.


[stextbox id=”warning” caption=”இருப்பினும்”]

வாழ்க்கையின் ஒரு தருணத்தில் காஃப்கா சைவ உணவாளராக மாறிவிட்டார். அதன் பிறகு பெர்லினினில் ஒரு நீர்வாழ் காட்சிசாலைக்குச் சென்றபோது, அங்குள்ள மீனிடம் “உன்னை சாப்பிடுவதை நிறுத்தி விட்டதால் எந்த வித குறுகுறுப்புமில்லாமல் இனிமேல் உன்னை நிம்மதியாகப் பார்க்கலாம்” என்றார்.

இருப்பினும்

[/stextbox]


[stextbox id=”alert” caption=”சுத்தம்”]

தற்செயலான துப்பாக்கிச் சூட்டிற்கு ஊரின் தென்பகுதியில் உள்ள ஒரு குழந்தை பலியானது. ஏழே வயதான அவன் பலியாகியிருக்கத் தேவையில்லை. சொல்லப்போனால் யாருமே பலியாகியிருக்கக்கூடாது. துப்பாக்கி வைத்திருந்தவன் அந்த குறிப்பிட்ட வீட்டில் உள்ளவர்களுக்கு பயம் காட்ட நினைத்தான். அது சிறுவன் லூயியினுடைய வீடு கூடக் கிடையாது. ஆனால் அவன் தன் நண்பன் வளர்க்கும் உடும்பை பார்ப்பதற்க்காக அங்கு வந்திருந்தான். அந்த உடும்பு, பச்சை நிறமாக இல்லாமல் சற்றே கூடுதல் மஞ்சல் நிறத்துடன் நோய்வாய்ப் பட்டது போல் காணப்பட்டது. ஏனென்று யாருக்கும் தெரியவில்லை. யாராவது தவறுதலாக அதற்கு சாப்பிட கீரை குடுத்திருக்கலாம். சலசலப்பு கேட்டு பையன்கள் வெளியே ஓடி வந்தார்கள். அப்போது லூயி நெஞ்சில் சுடப்பட்டு இறந்தான்.

ஈமச் சடங்கு செலவுகளுக்காக கார்களை சுத்தம் செய்து தருவதாக அறிவித்தார்கள் அவன் குடும்பத்தினர். இது ஒன்றும் வழக்கத்திற்கு மாறான முயற்சி அல்ல. செய்தித்தாள்கள் இதை வெளியிட்டான. அதிகமான பேர்கள் வந்தார்கள். வந்தவர்களில் பெரும்பாலோரிடம் பள பளவென்று சுத்தம் சுத்தம் செய்யத் தேவைப்படாத கார்கள் இருந்தன. அதற்காக அந்த குடும்பம் நன்றி கூர்ந்தது.

சுத்தம்

[/stextbox]


[stextbox id=”info” caption=”ஒரு வகையான கேக்கோ ?”]

அவன் சிறுவனாக இருந்த போது யாருடைய கொள்ளுத்தாத்தாவோ ஒரு பதிமூன்றாம் நூற்றாண்டு ப்ரென்ச் யாத்ரீகனைப் பற்றிய இந்தக் கதையை கூறினார்.

தள்ளு வண்டிகளை இழுத்துக் கொண்டிருந்த மூன்று பேரைச் சந்தித்தான் அந்த யாத்ரீகன். அவர்களிடம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டபோது அவனுக்கு கிடைத்த மூன்று பதில்கள் இதோ:
முதலாமவன்: தினமும் சூரியன் உதிப்பதிலிருந்து அஸ்தமனம் வரை கடுமையாக வேலை செய்தாலும் எனக்கு கிடைப்பதென்னவோ சில்லரைகள் மட்டுமே.
இரண்டாமவன்: வெகு மாதங்களாக வேலை இல்லாமலிருந்த எனக்கு இந்த தள்ளு வண்டியை இழுப்பது சற்று சந்தோஷத்தைத்தான் தருகிறது. என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது.
மூண்றாவன்: நான் சார்த்ர தேவாலயத்தை கட்டுகிறேன்.
ஆனால் சிறுவனான அவனுக்கு சார்த்ர தேவாலயம் என்றால் என்ன என்று ஒரு யோசனையும் இல்லை.

ஒரு வகையான கேக்கோ ?

[/stextbox]

~oOo~

குறிப்பு: இக் கதைகளின் இங்கிலிஷ் மூலக் கதைகள் கீழ்க்கண்ட வலைத் தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன.
https://fullenglishbooks.com/english-books/full-book-99-stories-of-god-read-online