குளக்கரை


[stextbox id=”info” caption=”இன வெறுப்பும் அடிமைத்தனமும்”


இன வெறுப்பும் அடிமைத்தனமும் நவீன வாழ்வின் தோன்றல்கள் அல்ல. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதும் சுரண்டுவதும் சமூக யதார்த்தமாகவும், குறிப்பிட்ட இனத்தைத் தழைக்க வைக்கப் போடப்படும் ‘நியாயமான’ சட்டங்களாகவும் பல நூற்றாண்டுகளாக நம்மிடையே நிலவி வந்துள்ளன. அமெரிக்காவின் கறுப்பின மக்களின் வரலாறு அப்படிப்பட்ட ஒன்றுதான். குறிப்பாக தெற்குப்பகுதிகளில் அடிமைத்தனத்தை அழித்த பின்னரும் தங்கள் மேலாதிக்கத்தைக் கைகொள்வதற்காக ஒப்பந்தக்கூலிகளாக மிரட்டியும், ஏமாற்றியும், குற்றம்சாட்டியும் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்களின் வரலாறு மிகக்கொடூரமானது. குற்றப்பரம்பரையினர் போல அவர்களது வம்சத்தை அடிமைப்படுத்த போடப்பட்ட சுரண்டல் வகைகள் எண்ணிலடங்காதவை. இந்த கட்டுரை அதைப் பற்றிய வரலாறையும் இன்றைய காலகட்டத்தில் நடந்துவரும் நவீன கறுப்பின வெறுப்புக்கான ஊற்றையும் விவாதிக்கிறது.

https://www.salon.com/2018/02/09/exploiting-black-labor-after-the-abolition-of-slavery_partner/

[/stextbox]


[stextbox id=”info” caption=”நதிப்பயணம்”]


 
ஜோசப் கான்ராடை நினைக்காமல் ஒரு காங்கோ நதிப்பயணம் அமைய முடியாது. சொல்லப்போனால் நமது இன்றைய உலகலாவிய அரசியலுக்கான அரிச்சுவடு கான்ராட்டின் நாவல்களிலும் அவர் காண்பித்த உலக வர்த்தக அமைப்புகளின் சுரண்டல் பற்றிய சித்திரத்திலும் இருப்பதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதே சமயம் கான்ராடின் பார்வை ஒரு காலனியாதிக்காவியினுடையது எனும் கருத்தும் ஆப்பிரிக்க எழுத்தாளர்களிடையே நிலவுகிறது.  மாயா ஜசனாஃப் எழுதிய சமீபத்திய புத்தகம் கான்ராடின் ஆழ்மனதின் பாதைகளை உலகலாவிய அமைப்பின் பின்புலத்தில் வைத்து ஆராய்கிறது. கான்ராடின் வாழ்வைப் பற்றி எழுதப்புகும் பலருக்கும் ஏற்படும் மத்தள அடியை இவரும் சந்திக்கிறார்.
https://theamericanscholar.org/the-wanderer/#

[/stextbox]

 

[stextbox id=”info” caption=”வறட்சி”]

 

முந்தைய செய்தியில் கான்ராடின் வாழ்வும் உலகளாவிய சூழலும் பற்றிய ஆய்வுக்கு சற்றும் குறைந்ததல்ல நாம் இப்போது பார்க்கப்போகும் செய்தி. கடந்த வருடத்தை விட இந்த வருடம் ஹம்மஸ் என அழைக்கப்படும் கொண்டைக்கடலை வகை மசியல்கள் விலை அதிகரித்திருக்கின்றன. இந்தியாவில் மிக அதிகமாக விளையும் இந்த பருப்பு வகை மழை பொய்த்ததால் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் விலை ஏறிவிட்டன.அதே போல கலிபோர்னியாவில் நீர் இல்லாததால் பாதாம் பருப்புகள் விளைச்சல் குறைந்துள்ளன. இப்படியாக உலகின் வறட்சிஒரு பகுதியின் வறட்சி பிற பகுதியினரை நேரடியாக பாதிக்கத் தொடங்கியிருக்கும் யுகத்துக்கு வந்துவிட்டோம். தனிரக விளைச்சல்களும், மண்ணுக்கு உகந்த உள்ளூர் விளைச்சல்களும் இந்த நிலைமையை சரிசெய்ய உதவும். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், நீர் மேலாண்மையும், மண் சுழற்சித் திட்டங்களும் சரிவர மேற்கொள்ளும் நாடுகள் எதிர்காலத்தில் உலகத்துக்கே உணவு வழங்கும் வள்ளலாக மாறலாம்.

[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.