வில்லியம் காஸின் ஐம்பது இலக்கியத் தூண்கள்

ஜெர்மானிய- இட்டாலிய நகைமுரண்களுக்கிடையேதான் எத்தனை வேறுபாடு. உலகை கறாராக எடுத்துக் கொள்ள மறுப்பதனாலேயே அதை ஸ்வேவோ கறாராக வரையறுக்கிறார்; அனைத்தையும் மிக லேசாகவே அவர் கையாளுகிறார். இறுதியில் மிக அபத்தமாக தொனிக்கும் ஒரு விஷயத்தைக் கொண்டு மிக முக்கியமான ஒன்றைப் படைப்பதற்காக மான் உலகை கனத்த கவனிப்புடன் அணுகுகிறார். அவருடைய மிக மென்மையான தொடுதல்கூட கன்றலை விட்டுச் செல்லும் திறன் படைத்தது. ஒரு அடாவடியனின் தாக்குதல் விட்டுச் செல்லும் கன்றல் அல்ல, டாக்டரின் தடுப்பூசியால் உண்டாகும் கன்றலைப் போல. என்னுடன் பணியாற்றும் நவோமி லெபோவிட்ஸ் ஸ்வேவோவைப் பற்றி அற்புதமாக எழுதியிருக்கிறார்.