மகரந்தம்


[stextbox id=”info” caption=”பாறை ஓவியங்கள்”]

காஷ்மீர் பகுதியில் கிடைத்த ஒரு பாறை ஓவியம் அகழ்வாராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்படுத்தியதோடு மட்டுமல்லாது வானவியலாளர்களையும் திகைக்க வைத்துள்ளது. பொதுவாக பாறை ஓவியங்களின் வயதைக் கண்டுபிடிப்பது சிரமமான ஒன்று. கார்பன் டேட்டிங் முறையில் உள்ள சிக்கல்களைத் தாண்டி அவற்றின் வயதை அறிவது கடினம். ஒரு வீட்டில் சுவருக்குப் பின்னே இருந்த இந்த ஓவியத்தைக் கண்டுபடித்த அகழ்வாராய்ச்சியாளர்கள் அதில் இரு பிரகாசமான ஒளி பொருந்திய விண்மீன் வடிவங்களைக் கண்டனர். ஒரே நேரத்தில் வானில் இரு பெரும் சூரியன்கள் இருப்பது அறிவியலுக்குப் புறம்பானது என்பதை உணர்ந்து இது சூப்பர்நோவா எனும் வெடிப்பு கணத்தைக் காட்டும் படம் என யூகித்தனர். இதற்காக இந்த ஓவியத்தை மேலும் நுணுக்கமாக ஆராய்ந்தபோது மேலும் பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. இந்த ஓவியத்தில் இருந்த ஒவ்வொரு வடிவமும் வானத்திலிருந்து நட்சத்திரங்கள் மற்றும் ராசிகளின் வடிவங்களாக இருக்கக் கண்டனர். அப்படிப்பார்த்தான் கி.மு 3600 ஆம் ஆண்டு என கணிக்கப்பட்ட இந்த ஓவியம் உலகில் கிடைத்த மிகப் பழைமையான நட்சத்திர வரைபடம் எனக்கொள்ளலாம்.

https://qz.com/1171320/5000-year-old-rock-art-found-in-india-is-likely-the-oldest-depiction-of-a-supernova/

[/stextbox]