சோவியத் ரஷியாவில் பல்வேறு பொது இடங்களில் பெரிய ஓவியங்களையும் சித்திரவடிவுகளையும் சோசலிஸப் பிரச்சாரத்திற்காக நிறுவினார்கள். ரஷியா சிதறுண்ட பின் அந்த கல்லோவியங்கள் இன்னும் எஞ்சி நிற்கின்றன. அவ்வாறு உக்ரெய்ன் நாட்டில் பொது இடங்களில் அமைந்திருக்கும் சிற்பங்களையும் பிரும்மாண்ட கலைப்படைப்புகளையும் தேடி யூஜென் நிகிஃபொரவ் கிளம்புகிறார்.
இன்னும் பல அரசு அலுவலகங்களின் முகப்பில், வரவேற்பரையில் லெனின் எழுபதடி கட் அவுட் போல் நிற்கிறார். அமெரிக்காவில் நிறவெறிக்கு ஆதரவாக போரிட்டோரின் நினைவுச் சின்னங்களை அகற்றுவது போல் கம்யூனிஸத்தின் எச்சங்களையும் நீக்க வேண்டும் என யுக்ரெயின் அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. அதற்கு முன் ஊர் ஊராகச் சென்று ஒளிப்படமாக்கி புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்.
கீழே டொனட்ஸ்க் நகரப் பள்ளிக் கூடத்தில் “பிரமதீயஸ்கள்” என்னும் கலைவேலைப்பாடு: