குளக்கரை


[stextbox id=”info” caption=”Heading1″]

நம் உடலை சற்றே உற்று கவனித்தாலே தெரியும், அது எத்தனையோ ஆச்சரியங்களை இயற்கை என்ற பெயரில் பொதித்து வைத்திருக்கிறது என்று. ஓர் ஆரோக்கிய மனித உடல் வெப்பநிலை 97°F (36.1°C) லிருந்து 99°F (37.2°C)க்குள் இருக்கும். இது போலவே ஓர் ஆரோக்கியரின் ரத்தத்தில், சோடியத்தின் அளவு ஓர் லிட்டருக்கு 135லிருந்து 145 milliequivalents (mEq/L). இந்த அளவுகளிலிருந்து சற்றே மீறினாலும் உடல் சீர்கேட்டிற்கு கொண்டு செல்லும். அவ்வாறு செல்ல விடாமல் உயிரினங்கள் உடல், தன்னளவிலேயே சம நிலைக்கு கொண்டு வந்துவிடும்.

இத்தனை கட்டுக்கோப்பாக உயிரனங்களின் உடல் சுயமாக சமநிலை பேணுவதை மருத்துவ துறையில் நீர்ச்சம நிலை (homeostasis) என்ற சொற்றொடரில் குறிக்கப்படுகிறது. தன் தகப்பனார் உடல் நிலை சரியில்லை என அறிந்தவுடன் சித்தார்த் முகர்ஜி அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு விரைவதில் தொடங்குகிறது, இந்தக் கட்டுரை. கொஞ்சம் கொஞ்சமாக தளரும் தகப்பனாரின் உடல் நிலையை, இதுவரை இந்த உடல் சுய சமச்சீர் நிலை பேண செய்யும் முயற்சிகளை பதிவு செய்கிறார். இயற்கையின் இந்த மகத்தான சமச்சீர் நிலை பேணுதல் ஓர் கட்டத்தில் தொடர முடியாமல் போய்விடுகிறது. அதன்பின்… அதன்பின்…. சட்டென, தொடர் நிகழ்வுகளால் மீள முடியாத கட்டத்திற்கு போய் விடுகிறது. கட்டுரை பல்வேறு வினாக்களை எழுப்புகிறது, சிந்திக்க வைக்கிறது.

https://www.newyorker.com/magazine/2018/01/08/my-fathers-body-at-rest-and-in-motion
[/stextbox]


[stextbox id=”info” caption=”புது யுகம், புது வியாதி”]

போனை கையில் எடுத்ததும் வாட்ஸப், பேஸ்புக் பக்கம் போகும் பழக்கம் உண்டா உங்களுக்கு? பிடியுங்கள் சோசியல் மீடியா வியாதி. புது உடுப்பு போட்டதும், புது இடத்திற்குப் போனதும், பழைய இடத்தில் உட்காரும்போதும் செல்ஃபி எடுப்பவரா நீங்கள்? செல்ஃபியைடிஸ் நோயின் பிடியில் இருக்கும் பல லட்சம் மக்களில் நீங்களும் ஒருவர். இவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு விதத்தில் சமூகத்தோடு உரையாடுதில் சிக்கல் கொண்டவர்கள். தாழ்வு மனப்பான்மை, அதீத பயம், சிறு தவறு செய்வதில் உள்ள தயக்கத்தால் எதையும் முயலாமல் இருப்பது போன்றவை சில அறிகுறிகளாம்.

https://link.springer.com/article/10.1007%2Fs11469-017-9844-x

[/stextbox]