மகரந்தம்


[stextbox id=”info” caption=”அவுஷதம்”]

காய்ச்சல் என்பது நோய் அல்ல. அது நோயுடன் போரிடும் உடலின் உஷ்ணம் அதிகரிக்கும் நிலை. ஆனால் காய்ச்சலைத் தணிப்பதற்காக நாம் பயன்படுத்தும் மருந்துகள் நோய்த்தொற்றின் தீவிரத்தை அதிகப்படுத்தி விடுகின்றன என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது சம்பந்தமாக சில குளிர் இரத்தப் பிராணிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகளில், குறைந்த வெப்பநிலை கொண்ட அறைகளில் வைத்து காய்ச்சல் ஏற்படாவண்ணம் தடுக்கப்பட்ட விலங்குகள் அதிக அளவில் மரணமடைந்துவிடுகின்றன என்று நிரூபிக்கப்பட்டது. மாறாக மனிதர்களில் காய்ச்சலை மலேரியா கிருமிகளை உட்செலுத்தி உருவாக்கி, அதன் மூலம் சிஃபிலிஸ் போன்ற நோய்களைக் கூட குணமாக்க இயலும் என்று சில மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்வது, நியுமேனியா, ஃப்ளூ போன்ற நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் அழிக்க உடல் எடுத்துக்கொள்ளும் நேரத்தை அதிகமாக்குகின்றன. மேலும் பல ஆராய்ச்சிகளின் படி, காய்ச்சல் நமது நோய் எதிர்ப்புத்திறனை அதிகரித்து உடலுக்கு நன்மையே புரிகின்றது.

இருப்பினும், நாம் ஏன் காய்ச்சலைக் கண்டு பயப்படுகிறோம் ? அதை எப்படியாவது தணிக்கவேண்டும் என்று துடிக்கிறோம் ? காய்ச்சல் என்பதை ஒரு நோய் என்று கருதுவதாலா அல்லது அதிகமான காய்ச்சல் மூளையைப் பாதிக்கும், வலிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சுவதாலா? காய்ச்சலைப் பற்றியும் அது தொடர்பான ஆய்வுகளைப் பற்றியும் விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

https://www.thedailybeast.com/let-it-burn-why-you-should-let-fevers-run-their-course
[/stextbox]


[stextbox id=”info” caption=”மனிதரைப் போல் சிந்திக்கலாமா?”]

முகத்தைப் பார்த்தே ஆருடம் கூறுபவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், மனிதனுடைய பாலியல் விருப்பம் ‘எந்தப்பக்கம்’ என்பதை ஒருவருடைய முகத்திலிருந்து அறிந்துகொள்ளும் இயந்திரம் ஒன்றை இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 81 சதவிகிதத் துல்லியத்துடன் ஒரு மனிதர் ஓரினச்சேர்க்கையாளரா இல்லையா என்று கண்டுபிடித்துவிடுமாம் இந்த இயந்திரம். இது ஒருபுறமிருக்க, இப்படி தனிமனித சுதந்தரத்தில் தலையிடலாமா என்று கொடிபிடிக்க ஆரம்பித்துவிட்டனர் ஒரு சாரார். இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்துவிட்டன. முகத்தை வைத்துச் செய்யும் இந்த ஆராய்ச்சி தனிப்பட்ட காரணங்களுக்காகத் தவறாகவும் பயன்படுத்தப்படலாம் என்று எச்சரிக்கின்றனர் சிலர். இப்போது பலரின் வேண்டுதல், இயந்திரம் தவறாகக் கண்டுபிடிக்கும் 19 சதவிகிதத்தில் இருக்கக்கூடாது என்பதுதான்.

https://www.nytimes.com/2017/10/09/science/stanford-sexual-orientation-study.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”குடிமகனாக எவ்வளவு காசு?”]

1,00,000 டாலர் இருந்தாலே போதும். 130 நாடுகளில் விசா இல்லாமல் பயணம் செய்ய உதவும் கடவுச்சீட்டைப் (பாஸ்போர்ட்) பெறலாம். செயிண்ட் கிட்ஸ் போன்ற கரிபியன் தீவுகள் தம் நாட்டின் கடவுச் சீட்டுகளை விற்கின்றன. மால்டா, மாண்டெநெக்ரோ போன்ற யூரோப்பியச் சிறு நகர அரசுகளும் இதில் இறங்கியுள்ளன. அமெரிக்காவே அரை மிலியன் டாலர் முதலீட்டுக்கு குடியிருக்க வழி செய்கிறதாம். குஷ்னரும் சீன பிலியனேர்களும் இந்தத் திட்டத்தைத்தான் பயன்படுத்த முயற்சி செய்தார்கள். அத்தனை வெற்றி பெறவில்லை.

இராக்கியர்கள், லிபியர்கள், சீனர்கள், மாஸ்கோவியர்கள் இன்னும் பற்பல நாடுகளின் மக்களுக்கு உதவும் மசை. அமெரிக்கர்கள் கூடப் பல நாடுகளில் நுழைய இந்த மாற்று கடவுச் சீட்டுகளைப் பயன்படுத்துகிறார்களாம்.

பிரிட்டிஷ் பத்திரிகை த எகானமிஸ்ட்டின் வாரச் சஞ்சிகையில் வெளி வந்த கட்டுரை:

https://www.1843magazine.com/features/citizens-of-anywhere

எந்த நாட்டு கடவுச்சீட்டில் முதலீடு செய்வது மேலான பயன் தரும்? எது எளிது, எது கடினம்? எது விலை அதிகம் கேட்பது? எது ஆபத்து நிறைந்தது போன்ற கேள்விகளுக்கு அடுத்த கட்டுரை பதில் சொல்கிறது. இந்தப் பட்டியலில் ஏழை நாடுகளும், உலகின் பெரும் பணக்கார நாடுகளும் உண்டு. இவை மட்டுமேதானா என்றால், இல்லை. மேலும் பல நாடுகளும் உண்டு. அவை இங்கு ஆராயப்படவில்லை, அவ்வளவே.

https://www.1843magazine.com/features/which-passport-offers-the-best-perks
[/stextbox]

2 Replies to “மகரந்தம்”

Comments are closed.