முடிக்கப்படாத நாட்குறிப்பில்
முடிக்கப்படாத நாட்குறிப்பில்,
பெய்துகொண்டிருக்கிறது
பனியும் வெயிலும்;
ஓடிக்கொண்டிருக்கிறது
ஜன்னல் வழி நதி.
வழக்கமான பாதையில்
நடந்து செல்கிறார் நண்பர்,
நான் பார்க்காத அவர் நாயும்.
பக்கம் முடியும் இடம்
பேருந்து திரும்பிக்கொண்டேயிருக்கிறது.
வானம் நிறம் மாறுகிறது.
சத்தங்களும் முகங்களும்
தெரிந்து மறைகின்றன.
அன்று, நான் மட்டும் அங்கு
இருக்கவில்லை
மழைக் காய்ச்சல்
கனவுள்ளே கனவுள்ளே
கனவுலகில்,
மழையின் சத்தம்.
அத்தனை கனவுகளின்
கண்களும் விழித்து
விசாரிக்கின்றன.
படுத்திருக்கும்
அறையின் கூரைவழி
இன்னும் இரு கனவுகள்
நனைந்து திரும்பிவிட்டேன்.
முடிக்கப்படாத நாட்குறிப்பில்
கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்