ஃபிரெஞ்சு புகைப்படக்காரர் ஹென்ரி கார்ட்யெ பிரசன் (Cartier-Bresson) இந்தியாவில் பல்லாணடுகள் செலவழித்திருக்கிறார். இவர் நம் மகாத்மா காந்தியை படங்களாகப் பதிவு செய்தவை உலகப் புகழ்பெற்றவை. காந்தியைத் தவிர ரமண மகரிஷியின் ஆசிரமம், கதகளி குருகுலத்தின் நடனப்பயிற்சி, காஷ்மீரத்தின் இயற்கை, அகமதாபாத் நகரத்தின் சந்து பொந்துகள் எல்லாம் உண்டு. அவற்றை நியு யார்க் நகரத்தில் கண்காட்சியாக வைத்திருக்கிறார்கள்.