[stextbox id=”info” caption=”எளிதில் ஏமாறுபவர்”]
மூன்று இதயங்களை தன்னகத்தே வைத்திருக்கிறது. அதில் நீலமும் பச்சையும் கலந்த ரத்தம் ஓடுகிறது. மென்மையான தோல் கொண்டதால் மெல்லுடலிகள் வகையைச் சேர்ந்தது. தமிழில் சிலந்திமீன், நீராளி, பெரிய கணவாய், சாக்குக்கணவாய், பேய்க்கடம்பான், சாக்குச்சுருளி என்றெல்லாம் அழைக்கிறார்கள். எட்டு கால்கள் போல் கொண்டிருப்பதால் ஆங்கிலத்தில் ஆக்டோபஸ். எத்தனை கால் இருந்தால் என்ன… பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக எதிர்கொண்டு தீர்த்து வைப்பதில் அறிவாளி. மனிதர் மட்டுமே கருவிகளைக் கொண்டு தன் திறமையை பன்மடங்காக்கும் வித்தை தெரிந்தவர் என்பதை தவிடுபொடியாக்கும் நுண்ணறிவாளர். ஆனால், மனிதர் போலவே ஏமாற்றவும் தெரிந்த மிருகம். அதைத் தவிர தன் நகையுணர்வை வேறு வெளிபடுத்துகிறது. விலங்கு போல் ஒலியெழுப்பும்/பேசும் கலையை அறிந்திருக்கிறது. ஒரு வேளை நமக்குள்ளேயே உலாவும் வேற்றுக்கிரக வாசியோ? இங்கே இரண்டு புத்தகங்களின் துணை கொண்டு அமியா ஸ்ரீனிவாசன் அலசுகிறார்.
https://www.lrb.co.uk/v39/n17/amia-srinivasan/the-sucker-the-sucker
[/stextbox]