பொது சகாப்தத்திற்கு முன் 120ஆம் ஆண்டில் கிரேக்கத்தில் ஹிப்பார்க்கஸ் என்னும் வானவியலாளர் கோணவியலின் சூத்திரத்தை நிறுவினார் என நேற்று வரை எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால், இப்போது பொது சகாப்தத்திற்கு முந்தைய 1762ஆம் வருடத்திலேயே பாபிலோனியர்கள் கோணக் கணிதத்தை அறிந்திருக்கிறார்கள் என்பதை கல்வெட்டு காட்டுகிறது. பித்தேகோரஸ் தேற்றம் சொல்வதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பே மெசபட்டோமியாவில் பாபிலோனிய நாகரீகம் அதை கல்பலகையில் பொறித்திருப்பதை கீழே காணலாம்.