[stextbox id=”info” caption=”செஞ்சிலுவைச் சங்கம்”]
உலக மக்களிடையே மருத்துவம், துயர் துடைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமைப்புகளில் ரெட் கிராஸ் எனப்படும் செஞ்சிலுவைச் சங்கம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், ரெட்கிராஸ் நிஜமாகவே அவ்வாறு தன்னலமற்ற சேவையை வழங்குகிறதா என்பதை ஆராய்ந்தபோது ரெட் கிராஸ் வெறுமனே புறத்தோற்றத்தில் மட்டும் அப்படி பாவ்லா செய்வதாக தெரியவந்திருக்கிறது. பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு நியு ஆர்லின்ஸ் நகரில் வெறுமனே ஷோகேஸ் பொம்மை போல் ஒரு காரை அங்கும் இங்கும் ஓட்டி, நிவாரணத்தில் ஈடுபட்டது போல் சி.என்.என். டிவியில் பிரச்சாரம் மட்டும் செய்தது பல ஆண்டுகள் முன்பு அம்பலமானது. அதன் பின்னும் ஹெய்ட்டி பூகம்பம் போன்ற பேரழிவுகள் நடந்த சமயங்களில் பணம் வசூல் செய்வதையும், நன்கொடைகளைப் புதிய நுட்பங்களைக் கொண்டு குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியதை இந்தக் கட்டுரை ஆதாரபூர்வமாக முன்வைக்கிறது. 2011ல் ஹெய்ட்டி நாட்டில் நடந்த நில நடுக்கத்திற்குப் பின் ஐம்பது கோடிகளைத் தானமாக சேகரித்துவிட்டு, மொத்த நாட்டிற்கும் ஆறே ஆறு வீடுகளை கட்டிக் கொடுத்தது போல் ஹூஸ்டனிலும் செயலற்று இருப்பார்கள் என்கிறார்கள்: