நுண்ணறிவு-2

மூளை சில குறிப்பிடத்தக்க கற்கும் குணங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவது, நாம்  விரைவாகக் கற்கிறோம். பல நேரங்களில் புதிய ஒன்றை அறிந்துகொள்வதற்கு, சில மேலோட்டமான பார்வைகள் அல்லது  விரல்களின் சில தொடுதல்கள் மட்டுமே போதும். இரண்டாவது, கற்றுக்கொள்ளல் என்பதே, படிப்படியாக நிகழ்கிறது. புதிதாக சிலவற்றைக் கற்குமுன், மூளையை மறு  பயிற்சிக்கு உட்படுத்த வேண்டிய அவசியமோ  அல்லது  முன்பு கற்றதை மறக்கவேண்டிய நிர்ப்பந்தமோ இல்லை. மூன்றாவது, மூளைகள் தொடர்ந்து கற்றுக்கொள்கின்றன. திட்டமிட்டும், செயலாற்றியும் உலகில் நடமாடி வரும் வேளைகளில் கூட, நாம் கற்பதை ஒருபோதும் நிறுத்துவது இல்லை. மாறும் உலகிற்கேற்ப மதிநுட்ப அமைப்புகள் (intelligent systems) இயங்க வேண்டுமானால்,  விரைவு, படிப்படியான உயர்வு, எல்லையற்ற நீட்சி ஆகிய மேற்குறிப்பிட்ட   சிறப்பியல்புகள் கொண்ட கற்றல் அவசியம்.