மகரந்தம்


[stextbox id=”info” caption=”வீட்டுக்குள் அரசியல் பேசவேண்டாம்”]

தபால் ஓட்டுக்கள் என்ற உடன் ஓட்டுக்கள் எண்ணும் நாளில் முதலில் எண்ணப்படுபவை அவை என்பதுதான் நம் நினைவுக்கு வரும். அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகணத்தில் இப்படித் தபால் மூலம் ஓட்டளிப்போர் வீடுகளில்த், அரசியல் பேசத் தடைவிதிக்கும் சட்டமுன்வரைவு ஒன்று பிரச்சனையைக் கிளப்பியுள்ளது. டெக்ஸாஸ் செனேட்டில் மெஜாரிட்டி மூலம் நிறைவேற்றபட்ட இந்த முன்வரைவு தற்போது டெக்ஸாஸ் பிரதிநிதிகளின் சபைக்குச் சென்றுள்ளது.  ஓட்டளிப்பவரை அவரது வீடுகளில் உள்ள உறுப்பினர்கள் நிர்பந்தித்தால், அது கிரிமினல் குற்றாமாகக் கருதப்பட்டு 4000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டும் என்ற ஷரஹ்தையும் இந்தச் சட்டம் கொண்டுள்ளதால் அதை ஜனநாயகக் கட்சியினர் எதிர்க்கின்றனர். ‘வாக்களிப்பதில் மோசடிகளை நீக்கவேண்டியது அவசியம்தான் ஆனால் யதார்த்தத்தில் நிறைவேற்ற முடியாத சட்டங்களைக் கொண்டுவருவதால் என்ன லாபம்’ என்கின்றனர் அவர்கள். இது பற்றிய கட்டுரை ஒன்று.

கட்டுரை இங்கே
[/stextbox]


[stextbox id=”info” caption=”பதினாறு ஆண்டு ஆட்சி”]

கடந்த நவம்பரில் ட்ரம்ப் பெற்ற வெற்றியின் காரணத்தை இன்னும் அமெரிக்கா ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அது தந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே பலருக்கு பல நாட்கள் ஆகியிருக்கிறதென்று தெரிகிறது. இந்த ஆராய்ச்சிகளின் ஒரு பக்கம் அளிக்கும் முடிவுகள் பலருக்கு மென்மேலும் அதிர்ச்சிகளை அளிக்கக்கூடும்.  அடுத்த பதினாறு ஆண்டுகளுக்கு அவர் குடும்ப ஆட்சியே நீடிக்கும் (அடுத்த முறையும் ட்ரம்ப் அதன்பின் அவரது மகள் இவாங்கா ட்ரம்ப் 8 ஆண்டுகள்) என்று ஒரு தரப்புக் கூறிவருகிறது. அடுத்த முறை ட்ரம்பை நாமினேட் செய்வதற்கான முயற்சிகள் இப்போதே துவங்கிவிட்டன. அவருக்குச் சரியாக போட்டியாக இருந்திருக்கூடிய சாண்டர்ஸின் நாமினேஷனைத் தடுத்த ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் அடுத்த முறையும் அவரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. வரும் ஆண்டுகளில் இந்தத் தேர்தல்களில் போக்கு எவ்வாறு இருக்கக்கூடும்

கட்டுரை இங்கே
[/stextbox]