குளக்கரை


[stextbox id=”info” caption=”மலர்களின் பரிணாம வளர்ச்சி”]

பரிணாம வளர்ச்சியைப் பொருத்தவரை, மலர்களின் பரிணாம வளர்ச்சி எப்போது துவங்கியது என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 140 மில்லியனிலிருந்து 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்பட்டாலும், மலர்களின் படிமங்கள் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் காணப்படவே இல்லை. டார்வின் கூட மலர்களின் பரிணாம வளர்ச்சியைப் புதிராகவே கருதியிருக்கிறார். திடீரென்று பல்வேறு வடிவங்களில் காணப்பட்ட மலர்களின் வளர்ச்சியை ஒரு மர்மம் என்றே அவர் வர்ணிக்கிறார். ஆனால், தற்போது ஆராய்ச்சியாளர்கள் 792 வகை மலர்களிலிருந்து மலர்ச்செடிகளின் குடும்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதை அடிப்படையாக வைத்து, மலர்களின் முன்னோர்கள் எப்படி இருப்பார்கள் என்பதையும் வடிவமைத்துள்ளனர். இந்த ஆராய்ச்சியைப் பற்றியும் அதன் முடிவுகளைப் பற்றியும் விளக்குகின்ற கட்டுரை இது.

கட்டுரை இங்கே
[/stextbox]


[stextbox id=”info” caption=”பகுத்தறிவுச் சிந்தனை”]

பல ஆண்டுகளாக, உளவியலாளர்கள் நம்மை பாரபட்சம் மிக்கவர்கள், முறையாக சிந்திக்கத்தெரியாதவர்கள் என்று கூறிவருகிறார்கள் (ஆராய்ச்சிகளின் அடிப்படையில்தான்). ஆனால் இது மறுக்கப்பட்டும் வந்திருக்கிறது. ஒருவர் உணர்ச்சிகளினாலோ, கேள்விகேட்கப்படும் முறைகளினாலோ பாதிக்கப்படாவிட்டால் அவரது சிந்தனை சரியான வழியில், தர்க்கரீதியான வழியில் செல்லும் என்று கூறுவோர் உண்டு. இருப்பினும், பலவிதக் காரணிகளால், மனித மனத்தின் சிந்தனை பகுத்தறிவிற்குப் புறம்பாகத்தான் இருக்கும் என்பது பல ஆய்வுகளின் முடிவு. மெர்சியர் மற்றும் ஸ்பெர்பர் இருவரும் மேற்கொண்ட ஒரு ஆய்வு பரிணாம வளர்ச்சியின் காரணமாக  நம்முடைய முடிவுகளும் நம்பிக்கைகளும்  நம் முயற்சியால் மட்டுமின்றி மற்றவர்களோடு செய்யும் விவாதத்தால் மேம்படுகிறது என்று குறிப்பிடுகிறது. நாம் முடிவுகளை ‘உருவாக்குவதை’ விட, அவற்றை ஒப்பிட்டுத் தேர்வுசெய்வதில் சிறந்தவர்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த விவாதக் கோட்பாடு எவ்வளவு தூரம் சரி?

கட்டுரை இங்கே
[/stextbox]