தி கார்டியன் கொடுக்கும் இந்தப் படத் தொகுப்பில் இரானிய வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்று நிகழ்த்தல் காட்சிகள் மூலம் ஒரு கலைஞர் சித்திரித்திருப்பதைத் தொகுத்திருக்கிறார்கள். அவர் மிக நுண்மையான கேலியாகப் பல காட்சிகளை அமைத்து அவற்றைப் படமாக எடுத்தவை ஒரு தொகுப்பாகக் கிட்டுகின்றன. அந்தத் தொகுப்பில் சிலவற்றைக் கார்டியன் செய்தித்தாள் பிரசுரித்தது. இவற்றில் ஒரு படம் கீழே. மீதியை லிங்கைச் சுண்டி கார்டியன் தளத்துக்குப் போய்ப் பார்க்கலாம். இவற்றில் கடற்கரையில் சுடுதண்ணீரில் குளிக்கும் கேலி நகைச்சுவையும் உண்டு; இராக் போரினால் இறந்தோர் நினைவாக பாலைநிலங்களைக் கடக்கும் நடைபாதை புகைப்படங்களும் உண்டு: