கடலில் கிடைக்கும் வலம்புரி சங்கானது கல்லிலும் மணலிலும் புதைந்தாலும் தாக்குப் பிடிக்கிறது. கோரப்பற்களுடைய கடல் வாழ் சுறாக்கள் முதல் திமிங்கலம் வரை அதே சங்கை பலமாய்க் கடித்தாலும் சேதாரம் இல்லாமல் இருக்கிறது. புயலும் சுனாமியும் அலையும் தூக்கிப் போட்டு பந்தாடினாலும் இறுதியில் வென்று நிற்கிறது. அதன் உறுதியான அமைப்புடைய ரகசியம்தான் என்ன? சங்கின் பொருளமைப்புப் பொறியியலை மாஸச்சூஸ்ஸெட்ஸ் பொறியியல் பல்கலையின் (எம் ஐ டி) அறிவியலாளர்கள் ஆராய்கிறார்கள்: