தீபக் சௌஹான் மும்பையைச் சேர்ந்தவர். இந்தியா முழுக்க தன் புல்லட் பைக்கை எடுத்துக் கொண்டு 46,000 கிலோமீட்டர் சுற்றி வந்திருக்கிறார். நீல மலை நிலமான மிஜோரம் முதல் விசாகப்பட்டின வயல் வரை எல்லாமும் படம் பிடித்திருக்கிறார். கீழே கைவினைக் குடை தாங்கிய ஆடு மேய்ப்பவரை ஓரிஸாவின் பிரம்பூர் பகுதியில் க்ளிக்கியிருக்கிறார்.
மோட்டார் சைக்கிளில் பெரும் பயணங்கள் மேற்கொண்ட திரு.சௌஹான் அவர்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய சொல்வனத்துக்கு என்னுடைய வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் அளித்திருந்த இணைப்பின் வழியே சென்று அவரது வலைப்பூவை வாசித்தேன். மோட்டார்சைக்கிள் பயணம் பற்றிய ஆர்வத்தை உண்டாக்கும் விதத்தில் எளிய மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் வெவ்வேறு வண்ணங்களை எடுத்துக் காட்டும் விதமாக அவரது புகைப்படங்கள் அமைந்துள்ளன.