[stextbox id=”info” caption=”பொருந்தா இணைகள்“]
டிஜிடல் இந்தியா என்ற கனவை நடைமுறைபடுத்த மோடி அரசு மிக துரிதமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணமற்ற வணிகம் என்பது டிஜிடல் இந்தியாவின் ஆதார கூறுகளில் ஒன்று. அது சீராக நடைபெற தொய்வில்லாத இணைய வசதி எப்போதும் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக வியாபார நிறுவனங்களுக்கு ஸ்திரமான இணைய சேவையும், தொடர்பும் இரவு பகலாக கிடைக்கும் என்ற நம்பிக்கை வர வேண்டும்.
அதே சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் வரக் கூடிய காலங்களிலும், இடங்களிலும் இதே அரசு இணைய தொடர்புகளை முழுவதுமாக முடக்குவதும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக மக்கள் குறைந்த அவகாசத்தில் தங்களை ஒருங்கிணைப்பதற்கு செல்பேசி இணைய தொடர்புகளை தொடர்ச்சியாக அரசு பல இடங்க்களில் கடந்த 2 வருடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல வாரங்கள் முடக்கியுள்ளது.
இந்த கட்டுரை டிஜிடல் இந்தியா என்ற கனவுக்கும், ஜனநாயகத்தில் மக்கள் உரிமைகளுக்கும் எங்ஙனம் அரசின் இணைய முடக்கம் ஊறு விளைவிக்கிறது என்பதை அலசுகிறது.
[stextbox id=”info” caption=”அடிமைமுறை – ஆண்டான் பார்வையில்“]
இருபத்திஒன்றாம் நூற்றாண்டிலும் உலகின் பல பகுதிகளில் அடிமைமுறை இன்னும் பின்பற்றப்படுகிறது. அதில் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் தான் நவீன காலத்தின் அடிமைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அடிமைமுறை செழிப்பதற்கு கல்வியின்மை, தகவல் இருட்டடிப்பு, வெளியுலகைக் குறித்த பிரஞ்சயின்மை என்பவை காரணங்களாக சொல்லலாம். இதற்கெல்லாம் மேலாக அடிமைமுறையை அகற்ற கூடிய சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அடிமைமுறையில் சம்பந்தப்பட்டுள்ள மக்களின் ஒத்துழைப்பு தேவை.
எதிர்பார்த்தபடி அடிமைகளை வைத்திருக்கும் முதலாளிகள் இதற்கு தடையாகவே இருப்பார்கள். இதற்கு எதிர்வினையாக அடிமைமுறையை எதிர்ப்பவர்கள் அந்த முதலாளிகள் சகமனிதனை அடிமைகளாக வைத்து கொடுமைபடுத்துவதை ரசிக்கும் கொடூர மனது கொண்டவனாக அணுகும் போக்கு உள்ளது. ஆனால் இப்பழக்கத்தின் சரி பாதி பங்குதாரர் அடிமைகளை வைத்திருப்பவர்கள், ஆதலால் அவர்கள் தரப்பை கேட்காமல், அவர்களை ஒரே நிறத்தால் சாயமடித்து ஒதுக்கி வைத்துவிட்டு இந்த பிரச்சனையை தீர்ர்க்க இயலாது.
இந்த கட்டுரை அடிமைகளை வைத்திருக்கும் மனிதர்களின் தரப்பிலிருந்து இப்பிரச்சனையை அணுகுகிறது. அவர்களுடைய தரப்பை கேட்டு, அவர்கள் கோணத்தில் இதை அவதானித்து ஒரு சித்திரத்தை அளிக்கிறது.
https://aeon.co/essays/this-is-what-slavery-looks-like-today-in-the-eyes-of-slavers
[/stextbox]