மகரந்தம்


[stextbox id=”info” caption=”செல்ஃபீ புள்ள”]

”வார்த்தைகள் என்பன பொருள்கள் அல்ல; செயல்பாடுகள்.” என்கிறார் டிவைட் பொலிங்கர். நீண்ட நெடுங்காலமாக அகராதிகள் என்பன – தெரிந்த வார்த்தைகளுக்கு அர்த்தங்களையும், எடுத்துக்காட்டு வாக்கியங்களையும், தலைச் சொற்களையும் அகரவரிசையில் பட்டியலிடும். இன்றைய இணையத்தினால் அகரமுதலிகள் எவ்வாறு மாறியிருக்கின்றன? நாளடைவில் மக்களின் பயன்பாட்டினால் வழக்குக் குறிப்புகள் – சொற்களின் பொருளை எவ்வாறு மாற்றுகின்றன? காலப்போக்கில் வார்த்தைகள் எவ்வாறு தங்கள் அர்த்தத்தை மாற்றிக் கொள்கின்றன?

இவற்றை இந்தக் கட்டுரை அலசுகிறது. இது அனேகமாக இங்கிலிஷ் மொழி பற்றித்தான் பேசுகிறது என்றாலும், இதன் மையக் கருத்துகள் நம் மொழிக்கும் செல்லுபடியாகுமா என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

http://www.publicbooks.org/the-selfie-taker-and-the-dictionary-maker/
[/stextbox]


[stextbox id=”info” caption=”பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய்”]

எஞ்சி நின்றதைக் குறிப்பால் உணர்ந்து, சொன்னவற்றால் சொல்லாதவற்றையும் உய்த்தறியுமாறு கூறுவது திருவள்ளுவர் முதல் இன்றைய நாளிதழ் வரை எங்கும் காணலாம். ”உண்மைச் செய்தி” என்றால் எதைக் குறிக்கிறது? சில சமயம் தகவல்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் பொதுக் கோட்பாடுகள்; சில சமயம் அறிவு சார்ந்த தத்துவங்கள்; சில சமயம் ஆய்வு சார்ந்த கற்பிதங்கள்; அத்தாட்சிகள், ஆதாரங்கள்; கள ஆய்வுகளின் அடிப்படையில் வரும் முடிவுகள்; பரிசோதனைகளைக் கொண்டு கண்டடையும் உண்மைகள். இந்த உற்றதுரைத்தலில் கிட்டுவன இன்றைய நிலையில் எவ்வாறு மருவித் திரிந்து புரட்டப் படுகின்றன? இங்கே அறியலாம்.

http://www.historytoday.com/david-wootton/brief-history-facts
[/stextbox]


[stextbox id=”info” caption=”பசிப்பிணி போக்கும் அமுதசுரபி”]

விமானியில்லாத விமானங்களை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது இந்த எண்ணம் உதித்து இருக்கிறது: அவற்றை உண்ண ஏற்றவையாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம் பேரழிவு தாக்குகிறதோ, எங்கு பசி வாட்டுகிறதோ, எப்பொழுது போர் மூள்கிறதோ, அப்போது இந்த விமானியில்லா விமானம் விண்ணில் செலுத்தப்படும். பஞ்சப் பகுதிகளில் தானாகவே இறங்கும். உடனை அதற்குள் இருப்பதையும் அந்த விமானத்தையும் பிய்த்து பங்கு போட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். இறைச்சியும் தேனடைகளும் உலர் காய்கறிகளும் கொண்டு இந்த விமானம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. களப் பணியாளர்கள் இந்த டிரோன் வெறும் கண்துடைப்பு என்றும், நிஜமான தாக்கத்துக்கு, களத்தில் இறங்கி உழைக்கும் தன்னார்வலர்களின் முனைப்பு தேவை என்றும் கருதுகிறார்கள்.

http://www.theverge.com/circuitbreaker/2017/3/14/14924176/windhorse-aerospace-drone-humanitarian
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.