மருத்துவம் – அறிவும் அதிகாரமும்
தடுப்பு மருந்துகளால் பிள்ளைகள் இறந்து போயின என்கிறார்கள். இது மாதிரி பீதியைக் கிளப்ப நிறைய பேர் இருக்கிறார்கள். குழந்தைகள் இறந்தது தடுப்பு மருந்துகளால் மட்டுமே என்று ஆதாரப்பூர்வமாக நிறுவ முடியுமா? கேட்டால் இவர்களே மூடி மறைக்கிறார்கள் என்கிறார்கள். இவை எதுவுமே நிரூபிக்கப் படவில்லை. எல்லாமே தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறிந்த ’நம்பகமான வட்டாரங்கள்’ (ரிலையபிள் சோர்ஸ்) சொன்ன கதை. இதனால் காப்பாற்றப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை பிரம்மாண்டமானது. தரவுகள் ரீதியாக இதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இதன்மேல் நம்பிக்கையின்றி தடுப்பு மருந்துகள் போட்டுக்கொள்ளாமல் இருந்த ஆட்களையும் இந்த herd immunity என்னும் குழும நோயெதிர் திறன் காப்பாற்றி வந்திருக்கிறது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed