வாசகர் மறுவினை


[stextbox id=”warning” caption=”ஒளி – ஒரு குறுஞ்சரித்திரம்”]

மிகவும் பயனுள்ள தகவல்கள்; எதிர்கால மாற்றங்களை புரிந்துகொள்ள உதவும். நன்றி

வெங்கட்ராமன் கோபாலன் ஜீ அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் மிக அருமையான பணி
சிறப்பான எளிய நடையில் அமைந்த அறிவியல் கட்டுரைகளை தமிழில் படிப்பது மிக்க ஆர்வத்தையும் , ஆவலையும் தூண்டுவதாக உள்ளது

சிறிய சந்தேகம்

///தண்ணீரின் ஒளிமுறிவு எண் 1.33- இதன் பொருள், வெற்றிடம் அல்லது ஏதுமற்ற வெளியில் விரைவதைக் காட்டிலும் 1.33 மடங்கு மெதுவாக தண்ணீரில் ஒளி பரவுகிறது என்பதே./////

நீரில் ஒளியின் refractive index என்பது வெற்றிடத்தில் ஒளியின் வேகத்துக்கும் நீரில் ஒளியின் வேகத்துக்கும் இடையிலான விகிதம் ஆகும்
n = 299 792 458 / 225 000 ௦௦
= 1 . 3324

இங்கு 1.33 மடங்கு மெதுவாக ஒளி பரவுகிறது என்பது தவறாக படுகிறது இது 1/1.33 மடங்கு அல்லது பங்கு வேகத்தில் ஒளி பரவுகிறது என்று வரலாம் என எண்ணுகிறேன் .
A , 15 km /h எனும் வேகத்தில் செல்கிறார் B , 5km / h வேகத்தில செல்கிறார் எனின் A யின் வேகம் B யின் வேகத்தின் 3 மடங்காகும் அதே வேளை B யின் வேகம் A யின் வேகத்தின் 1 / 3 மடங்காகும்

ஒளி – ஒரு குறுஞ்சரித்திரம் – தொடர் குறித்து

இலங்கை பௌதிகவியல் பாட நூல்களில் பின்வரும் ஆங்கில கலைச் சொற்கள் பின்வருமாறு மொழி பெயர்க்கப்பட்டிருக்கும்.

light emitting diodes, LED – ஒளி காலும் இருவாயிகள்
solar cell technologies – சூரிய மின்கல தொழிநுட்பம் .
optical communications network – ஒளியியல் பரிவர்த்தனை வலையமைப்பு
optical fiber network – ஒளியியல் நார் வலையமைப்பு
high light intensity – உயர் ஒளிச் செறிவு
superconductors – மீகடத்திகள்
refractive index – முறிவுச் சுட்டி

sayan

[/stextbox]


[stextbox id=”alert” caption=”மெய்ம்மை-கடந்த உலகில் உண்மை குறித்து…”]

கட்டுரையை முன் வைத்து:

உண்மை தோல் போர்த்திய பொய்கள் இன்று மட்டுமல்ல, அவை என்றுமே இருந்து வந்திருகின்றன. முற்காலங்களில் ஊடகங்களும்,வல்லுனர்களும் எது உண்மை, எது பொய் என்னும் விவாதத்தை அவர்கள் கட்டில் வைத்திருந்தார்கள். அவர்கள் உண்மை என்றதெல்லாம் உண்மையுமல்ல, பொய் என்றதெல்லாம் பொய்யும் அல்ல. இதை பற்றிய கருத்து பரிமாற்றங்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை. ஒரு சாமானிய மனிதனின் கருத்து அவனை சுற்றி ஒரு பத்து பேரை சென்றடைந்திருந்தால் அது பெரிய விஷயம். இன்று நிலைமை தலை கீழ். அவரவர்களுக்கு, அவரவரது உண்மை. பெரிய கூட்டங்கள் உரத்து ஒலிக்கின்றன. மெய்மைக்கு அப்பால் என்பது தற்காலத்து வார்த்தை பிரயோகமாக இருக்கலாம், ஆனால் அது முற்காலங்களிலும் இருந்து வந்திருகிறது.

எது ஒன்று நிரூபிக்க படுகிறதோ அது உண்மை என்று ஆங்கில அகராதிகள் சொல்லுகின்றன (Truth – A fact that has been verified). இதை நாம் ஏற்று கொள்வோமானால், இன்று நிகழும் பல விவாதங்களின் அடித்தளம் அனுமானங்களாலும், யூகங்களிளாலும் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன என அறிந்துகொள்ள முடியும். இது சரியா / தவறா என்பதை விட இது தவிர்க்க முடியாத ஒன்று என்பதுதான் நிதர்சனம். வல்லுனர்கள் தங்கள் வலுவை இழந்து விட்டார்கள். வல்லவர்கள் சாமானியர்கலின் குரலை, அவர்களது அறியாமையை, முட்டாள்தனத்தை தங்களுக்கு சாதகமாக, தாங்கள் பரப்பும் பொய்களுக்கு மூடியாக ஆக்கி கொண்டு விட்டார்கள்.
பாலாஜி

[/stextbox]


[stextbox id=”info” caption=”சொல்லாழி”]

இந்த கட்டுரை பல அரிய தகவல்களை சுவையாக அளிக்கிறது. மேலும் கணினி மொழியியல் (computational linguistics) மற்றும் தரவு மொழியியல் (corpus linguistics) நோக்கில் படித்தால் மிகவும் சுவாரஸ்யாக இருக்கும்.

நாடன் அவர்கள் புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவரது தமிழ் விழிப்புணர்ச்சி பணி மிகவும் சிறந்தது, பொறியாளர் மற்றும் பல துரை சார் வல்லுநர்கள் கவனத்தை பெரும் ஒரு கட்டுரை.

முத்து அண்ணாமலை

~oOo~

சொல்லாழி ஓர் அருமையான மொழியாய்வு கட்டுரை. இலக்கியங்கள் சார்ந்த விளக்கங்களோடு, பேச்சுத்தமிழ் சொற்களை எடுத்துக்கூறி பல காலங்கள் கடந்து கட்டுரை செல்லுகிறது.

/காலம் நான்கு கால் பாய்ச்சலில் குதித்துச் செல்லும்போது, விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் எண்ணற்ற மாற்றங்களை மானுட வாழ்வில் கொண்டு செலுத்தும் போது, மொழி மாத்திரம் எந்த மாற்றமும் பெறாமல் இருந்து விட இயலாது./

இது ஒன்று போதுமே ஏன் மாற்றங்கள் வேண்டுமென்பதற்கு. எத்தனை அருமையான சொற்கள் நம்மை சூழ்ந்துள்ளன என்பது இதுபோன்ற எழுத்துகளை படித்தால்தான் புரிந்து கொள்ள முடிகிறது.

/மொழி என்பது எவரின் கையடக்கப் பதிப்பு அல்ல./

ஆயிரத்தில் ஒர் எழுத்து.
உங்கள் தமிழ்ப்பணி வளர வாழ்த்துகள்

அன்புடன்
நாஞ்சில் இ. பீற்றர்

[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.