[stextbox id=”info” caption=”சிரியாவினால் விளைந்த நட்பும் எதிரிகளும்”]
ஆறு வருடங்களாக ஆடிய ஆட்டம் முடிவுக்கு வருவது போலொரு தோற்றத்தோடு நாம் 2017இல் அடியெடுத்து வைத்திருக்கிறோம். துருக்கி, சிரியா, ரஷ்யா, இரான், அமெரிக்கா போன்ற நாடுகள் ஐஸ்ஐஸ் தீவிரவாதிகளோடு நடத்தும் போர் அதிகாரப்பூர்வமான நிறுத்தத்தில் வந்திருக்கிறது. ஆலப்போ நகர் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்த நிலையில் இன்னும் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான தீவிரவாதிகள் அந்த இயக்கத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். அவர்களில் பலர் துருக்கி (இரவு கிளப்பு கொலைகள்) நாட்டில் நடத்திக்கொண்டுவரும் அழிவையும் நாம் பார்த்து வருகிறோம். சிரியா நாட்டு அதிகர் அசாத் ரஷ்ய அதிபர் புடீனுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு சிரிய நாட்டுத் தீவிரவாதிகளை எதிர்க்கும் வேளையில் துருக்கி இதுவரை ஆதரித்து வந்த உள்நாட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளிப்பதை நிறுத்தி வைத்திருக்கிறது. இரானும் தனது படைகளின் இழப்பைக் குறைக்க முடியும். இதனால் பயன்பெரும் நாடுகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமெரிக்காவின் இழப்பாக சிரிய போரை மாற்றியுள்ளனர். அமைதி திரும்பி, மக்களுக்குத் தேவையான உதவிகள் கிடைத்தால் போதுமென நீலிக்கண்ணீர் வடித்து அமெரிக்கா திரும்பியுள்ளது. நாடுகளின் வெற்றி தோல்வி பற்றிய ரிப்போர்டாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
[/stextbox]
[stextbox id=”info” caption=”இணையவழிப்ர்கள்”]
வரலாற்றாசிரியர்கள் காலகட்டங்களை எப்படி உருவகிக்கிறார்கள்? யுத்த காலம், தொழில்துறைக் காலம், தகவல் தொழில்நுட்பக்காலம் என பலவகையாக காலகட்டங்களைப் பிரிக்கிறார்கள். நாம் ஒரு காலயியந்திரத்தில் பயணம் செய்து நமது இன்றைய காலகட்டத்தை புரிந்துகொள்வது எப்படி எனப் பார்த்தால் பல ஆச்சர்யங்களையும் ஒற்றுமைகளும் இருக்கு. ஒரு வரலாற்றாசிரியர் கடந்த பத்து ஆண்டுகளை இணையப்போர்களின் காலகட்டம் எனப் பகுப்பார். இது நாடுகளுக்கிடையே நடக்கும் சைபர் யுத்தத்தைக் குறிப்பது. இன்றைய காலகட்டத்தில் தகவல்தொழில்நுட்பம் வழியே நமது அரசு இயக்கங்களும், ரகசிய பரிமாற்றங்களும், தொலைத் தொடர்பு திட்டங்களின் பரிவர்த்தனையும் நடப்பதால் இணையத்தைக் கைக்கொள்பவர் பலவான் ஆகிறார். அப்படி கடந்த சில வருடங்களாக அரசுகள் மாறியிருக்கின்றன, அணுமின் நிலையங்களின் ரகசிய செய்திகள் திருடப்பட்டிருக்கின்றன, பொதுமக்களின் தகவல்கள் முதல் அரசின் ரகசிய திட்டங்கள் வரை விக்கிலீக், சைபர் கிரிமினல்கள், ஹாக்கர்ஸ் போன்ற கணிணி வல்லுனர்களால் திரட்டப்பட்டு வந்துள்ளன. அவற்றைப் பற்றிய தீவிரமான அலசலை இக்கட்டுரை அளிக்கிறது:
https://www.theguardian.com/commentisfree/2016/dec/30/first-world-cyberwar-historians
[/stextbox]
[stextbox id=”info” caption=”ரஷ்யா எனும் தண்டல்காரன்”]
ரஷ்யாவைப் பார்த்து நாம் எந்தளவு பயப்படவேண்டும்? தவிர்க்க முடியாத சக்தியாக ரஷ்யா ரெண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக உலகலாவிய அரசியலில் பங்கு பெற்று வருகிறது. அணுசக்தியின் போரிலும், ரெண்டு உலக யுத்தங்களுக்குப் பின்னான நிழல் யுத்தத்திலும் ரஷ்யாவின் பங்கு அளப்பெரியது. இன்றும் சிரியாவின் கொலைக்குற்றங்களுக்குப் பின்னால் ரஷ்யா இருக்கிறது என அமெரிக்க எச்சரித்தபின்னும் துருக்கியும், சிரியாவும், இரானும் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டு வருகின்றன. ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளைப் பூண்டோடு அழிப்பதை ரஷ்யா கச்சிதமாக நிறைவேற்றிவிடும் எனும் நம்பிக்கை. பல உள்நாட்டு கலவரங்களும், சிறு குழுக்களும் இதில் முக்கிய கண்ணிகள் என்பதையும் அது மறக்கவில்லை. அணு ஆயுதப் போரைத் தாண்டி இன்று மின்னணுப் போர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் முடக்கப்பட்டு கைக்கொள்ளப்படும் கணினி சர்வர்களின் மறைமுகத் தாக்குதல்களால் அமெரிக்க தேர்தலைக் கூட ரஷ்யாவால் ஆட்டிவைக்க முடிகிறது எனும்போது ரஷ்யா எனும் பெரிய அண்ணனின் அடுத்தகட்ட நடவடிக்கையை அனைத்து நாடுகளும் கூர்ந்து கவனிக்கின்றன. உக்ரேனில் அவர்களது அத்துமீறலும் அதனால் க்ரிமியா போரும் உச்சகட்ட யூரோப்பிய எதிரியாக ரஷ்யாவை மாற்றியபோதும் எந்த யூரோப்பிய நாடும் அதற்கு எதிராக வலுவான எதிரியாக உருவாக முடியவில்லை.எவ்விதமான சமுதாய அமைப்பு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பையும் சந்தோஷமான வாழ்வையும் தரும்? இக்கட்டுரை இந்த கேள்வியை வரலாற்று நோக்கில் ஆராய்கிறது
https://www.thenation.com/article/the-perils-of-russophobia/
[/stextbox]