எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள் சொல்வனம் தள நண்பர்களுக்கு நெருக்கமானவராக இருந்திருக்கிறார். அவரது எழுத்துமுறையை ஒரு லட்சியமாகக் கொண்டுள்ள நண்பர்களும் உண்டு – “இந்தக் கட்டுரை அ. முத்துலிங்கம் எழுதியது போல் இருக்கிறது” என்பது ஒரு உயர்ந்த பாராட்டாக ஏற்றுக் கொள்ளப்படும். புனைவு, அபுனைவு இரண்டிலும் தனக்கென ஒரு தனித்தன்மையைக் கொண்டுள்ள அ. முத்துலிங்கம், தமிழுக்கு வெளியே உள்ள உலகை நம் மொழியின் வசப்படுத்தியிருக்கிறார். வெளிநாட்டு வாழ்வை எழுத முத்துலிங்கத்தின் பார்வை துணை செய்திருக்கிறது என்பதற்கு சொல்வனம் தளத்தில் வெளியாகியுள்ள பல கட்டுரைகள் சான்று. அவரைச் சிறப்பிக்கும் வகையில் என்று மட்டுமல்ல, அவரது முக்கியத்துவத்தை மீண்டும் நினைவுகூரும் வகையில் சொல்வனம் இம்மாதஇறுதியில் அ. முத்துலிங்கம் அவர்களின் எழுத்து குறித்து தமிழகத்தின் முதல் நிலை எழுத்தாளர்கள், வளரும் எழுத்தாளர்கள் மற்றும் கூர்பார்வை கொண்ட வாசகர்களின் கட்டுரைகள் கொண்ட சிறப்பிதழ் பதிப்பிக்கவிருக்கிறது.
அ. முத்துலிங்கம் அவர்களைப் பற்றியும், அவரது எழுத்து பற்றியும் நீங்கள் ஒரு கட்டுரை எழுத முடியுமா? ஜனவரி 25ஆம் தேதிக்குள் உங்கள் கட்டுரை கிடைத்தால் வசதியாக இருக்கும். உங்கள் கட்டுரையை எடிட்டருக்கு அனுப்பவும்- அவரது மின் அஞ்சல் முகவரி இது – editor@solvanam.com
நன்றி
பதிப்புக் குழு