ஒரு ஜன்னல்

வாழ்த்துக்கள்,

கடந்து போகும் ஒவ்வொரு நாளிலும் குளிர்காலம் தன் வேகத்தைக்  குறைத் துக் கொள்ள வெயில் வசந்தகால வரவை அடையாளப்படுத்துகிறது.நீங்கள் நலமென்று நம்புகிறேன்.

உங்களின் சமீபத்திய கடிதம் மகிழ்ச்சியைத் தந்தது. ஹம்பர்கருக்கும் ஜாதிக் காய்க்குமான உறவைச் சொல்லும் பகுதி நன்றாக எழுதப்பட்டிருக்கிறதென்ற எனக்குத் தோன்றியது வெங்காயத்தைப் பலகையில் வைத்து நறுக்குவதான சமையலறையின் மணம் அன்றாட வாழ்க்கையின் உண்மைத்தன்மையைச் மிக இயல்பாய் சொல்வதாயிருந்தது..

உங்களின் கடிதம் எனக்கும் ஹாம்பர்கர் சாப்பிடவேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிட அன்றிரவே நான் நேராக ஹோட்டலுக்குப் போய் அதைச் சாப்பிட் டேன்.அந்த ஹோட்டலில் எட்டுவகையான ஹம்பர்கர்கள் வைத்திருந்தார்கள். டெக்சாஸ், ஹவாய் கலிபோர்னியா,ஜப்பான் என்று எல்லாநாட்டு ஹம்பர்கர் களும் அங்கிருந்தன.டெக்சாஸ் ஹாம்பர்கர் பார்க்கப் பெரிதாக இருந்தது. டோக் கியோவின் இந்தப் பகுதிக்கு வரும் டெக்சாஸ் மனிதர்களுக்கு இது அதிர்ச்சி யாகத்தானிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.ஹவாய் ஹம்பர்கர் ஒரு அன் னாசிப் பழத்துண்டத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலிபோர்னியாவின் அலங்காரம்எனக்கு நினைவில் இல்லை.ஜப்பானிய ஹாம்பர்கர் துருவப்பட்ட முள்ளங்கியால் அழகுபடுத்தப்பட்டிருந்தது. அந்த இடமும் நன்றாக அலங்க ரிக்கப் பட்டிருந்தது. அங்குள்ள பணிப்பெண்கள் மிக அழகானவர்கள்.மிகவும் குட்டையான ஸ்கர்ட் அணிந்திருந்தார்கள்.

அந்த ஹோட்டலின் உட்புற வடிவமைப்பையோ அல்லது பணிப்பெண்ணின் காலைப் பார்க்கவோ நான் அங்கு போகவில்லை.டெக்சாஸ் அல்லது கலி போர்னியா அல்லது வேறு வகைகளிலான  ஹம்பர்களை சாப்பிடவும் போகவில்லை.மிகச் சாதாரணமான ஹம்பர்கரைச் சாப்பிடத்தான் அங்கு போனேன்.

அப்படித்தான் அந்தப் பணிப்பெண்ணிடமும் சொன்னேன்.பல வகைப்பட்ட ஹம்பர்கர்கள் தான்  தங்களிடம் இருக்கிறதென்று சொல்லி அவள் மன்னிப் புக் கேட்டாள்.

நான் அவளைக் குற்றம் சொல்லமுடியாது.மெனுவைத் தீர்மானிப்பவள் அவ ளில்லை.அவள் நாகரிகமாக உடுத்தியிருந்தாள்.நான் சிரித்தபடி ஹவாய் ஹாம்பர்கர் கேட்டேன்.அந்தப் பணிப்பெண்ணின் ஆலோசனைப்படி  அதிலுள்ள அன்னாசிப்பழத்தை நீக்கி விட்டுச் சாப்பிட்டேன்.

நாம் வசிக்கும் உலகம் எவ்வளவு விசித்திரமானது!நான் சாப்பிட நினைத்த தெல்லாம் மிகச்சாதாரணமான ஒரு ஹம்பர்கர்தான்.அன்னாசிப்பழமின்றி ஹவாய் வகையிலான ஒன்றைத்தான் இந்தச் சமயத்தில் சாப்பிடமுடியும்.

உங்களின் ஹாம்பர்கர் சாதாரணமான வகையைச் சேர்ந்ததாக இருக்கவேண்டு மென்று நினைக்கிறேன். நீங்கள் செய்யும் சாதாரண  ஹம்பர்கரைத்தான் சாப்பிட விரும்பினேன். உங்கள் கடிதத்திற்கு நன்றி.

தேசிய ரயில்வேயின் தானியங்கி டிக்கெட் இயந்திரம் பற்றி நீங்கள் எழுதி யிருந்த பகுதி மேலோட்டமாக எனக்குத் தெரிந்தது.அந்தப் பிரச்னை பற்றிய உங்கள் அணுகுமுறை நன்றாக இருந்தாலும் அதைப் படிப்பவர்களுக்குத்  தெளிவாகப் புரியாது.கடுமையான பார்வையாளராக இருக்கவேண்டியதில்லை

சொல்லப்போனால் எழுத்து என்பது ஒரு தற்காலிகமான செயல்தான்.

இந்தப் புதியகடிதத்திற்கு நான் 70 மொத்த மதிப்பெண்  தருகிறேன்.  உங்கள் நடை ஒரளவு முன்னேறியிருக்கிறது.பொறுமையை இழக்கவேண்டாம். இவ்வளவு நாட்கள் உழைத்தது போலவே தொடர்ந்து முயலுங்கள்.அடுத்த கடிதத்தை எதிர்பார்க்கிறேன்.

உண்மையான வசந்தகாலம் நெருங்குவதென்பது மகிழ்ச்சியைத் தருவதல் லவா?

குறிப்பு: நீங்கள் அனுப்பியிருந்த பலவகை இனிப்புகள் பெட்டி கிடைத்தது. அவை சுவையாக இருந்தன.நமது நிறுவனம் கடிதம் நீங்கிய,வெளிப்புற அளவிலான தோழமையுணர்வுக்குத் தடை விதித்திருப்பதால் இனிமேல் எனக்கு எதுவும் அனுப்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் எனினும் நன்றி.

இந்த பகுதி நேரவேலையை நான் ஒரு வருடமாகப் பார்த்து வருகிறேன்.அப் போது எனக்கு 22 வயது, ’பென் சொசைட்டிஎன்ற பெயருடைய சிறிய நிறுவனம் இது. நான் எழுதும் ஒவ்வொரு கடிதத்திற்கும் 2000 யென் தரப் படும்.ஒரு மாதத்தில் முப்பதிற்கும் மேலான கடிதங்களை எழுதுவேன்.

வசீகரம் செய்கிற கடிதங்களை எழுத உங்களாலும் முடியும்.கற்றுக் கொள் ளுங்கள்.” இப்படி நிறுவனம் தன்னை விளம்பரம்  செய்துகொண்டது..புதிய உறுப்பினர்கள் மாதக் கட்டணமும்,பதிவுக் கட்டணமும் செலுத்திய பிறகு ஒரு மாதத்தில் பென் அமைப்பிற்கு நான்குகடிதங்கள் எழுதமுடியும்.”பென்மாஸ் டர்களாகிய நாங்கள் அவர்களின் கடிதங்களுக்கு மேலே காட்டிய கடிதம் போல பதில்கடிதங்கள் எழுதுவோம்.எடிட் செய்வது,கருத்துக்கள் சொல்வது, வழிகாட்டுவது ஆகியவற்றைச் செய்வோம்.

இலக்கியத்துறை மாணவர்களின் அலுவலகம் செய்திருந்த விளம்பரத்தைப் பார்த்து மனுச்செய்து நான் வேலையில் சேர்ந்தேன்.பட்டப்படிப்பை முடிக்க ஒரு வருடம் தாமதம் ஏற்பட்டதாலும்,பெற்றோரிடமிருந்து எனக்குக் கிடைக் கும் பணவுதவி குறைந்ததாலும்முதல்முறையாக வாழ்க்கையை நானாக எதிர்கொள்ளவேண்டிய நிலை வந்தது. நேர்முகத்தேர்வுமுடிந்த பிறகு சில கட்டுரைகள் எழுதும்படி சொன்னார்கள்.ஒரு வாரம் கழித்து வேலையில் அமர்த்தப்பட்டேன்.பின்பு ஒரு வாரம் எப்படித் தவறுகளைத் திருத்துவது, வழிகாட்டுவது, மற்ற விஷயங்கள் குறித்து பயிற்சி தரப்பட்டது. வேலை சிக்கலாகயில்லை.

ஆண் உறுப்பினர்கள் பெண்களின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். பதினான்கு வயதிலிருந்து ஐம்பத்து மூன்று வயதுவரையிலான இருபத்தி நான்கு உறுப்பினர்கள் என் கீழ் இருந்தனர். பெரும்பான்மையானவர்கள் இருபத்தைந்திலிருந்து முப்பத்தைந்து வயதிற்குட்பட்டவர்கள். என்னைவிடப் பெரியவர்கள்.முதல்மாதம் கடிதம் எழுதுவது கஷ்டமாகவே இருந்தது. பெண் கள் என்னைவிட நன்றாக எழுதினார்கள்.அவர்களுக்கு கடிதம் எழுதுவதில் நல்ல அனுபவமிருந்தது.அந்த வேலைக்கு வரும்வரை எனக்குக் கடிதம் எழுது வது பற்றி தீவிரச்சிந்தனை இருந்ததில்லை.முதல்மாதம் எப்படிப் போன தென்று தெரியவில்லை.தங்களுக்குப் புதியபென் மாஸ்டர்வேண்டுமென்று பெரும்பான்மையான உறுப்பினர்கள் கேட்பார்கள் என்று பயம் தொடர்ந்து இருந்தது. அப்படிக் கேட்கலாம் என்பது நிறுவனச் சட்டமும் கூட.

மாதம் முடிந்தது. ஒரு உறுப்பினர் கூட என் எழுத்தைப்பற்றி புகார் செய்ய வில்லை.நான் பிரபலமாகி விட்டேன் என்று உரிமையாளர் சொன்னார்.மேலும் இரண்டு மாதங்கள் முடிந்த போதுவழிகாட்டுதலுக்கு நன்றியாகஎன் கட்ட ணங்கள் உயர்த்தப்பட்டன.இது விசித்திரமாகத் தெரிந்தது..

பெண்கள் என்னைத் தங்களுடைய ஆசிரியராக முழுமனதோடு நம்பினார்கள். இதனால் அவர்களுக்கான என் விமர்சனங்களை அதிக முயற்சியின்றியும், கவலையின்றியும் தந்தேன்.

அப்போது இது எதுவும் எனக்குப் புரியவில்லை. அவர்களுக்கு எழுத விருப்பம். ஆனால் எழுதுவதற்கு யாருமில்லை என்ற அவர்களின் தனிமை பின்னாளில் எனக்குப் புரிந்தது.டீஜெவிற்கு [Deejay] அவர்கள் ரசிகர் கடிதங்கள் எழுதவில்லை. திருத்தங்களும்,விமர்சனங்களும் வந்தாலும் கூட அவர்கள் அந்தரங்கமாக எழுத விரும்பினார்கள்.நொண்டிக் குதிரை கடிதக் குவியலில் கிடப்பது போல  என் இருபதுகளின் ஆரம்பக் காலம் கழிந்தது.

சலிப்புத் தருபவை,சுவையானவை,சோகமானவை என்று எல்லாவுணர்வுக ளோடும் பலவகையான கடிதங்கள்.

துரதிர்ஷ்டவசமாக அவை எதுவும் என்னிடமில்லை.( எல்லாக் கடிதங்க ளையும் நிறுவனத்தில் ஒப்படைத்து விட வேண்டும் என்பது சட்டம்) இவை யெல்லாம் பல காலத்திற்கு முன்பு நடந்தவை என்பதால் என்னால் அவற்றை விரிவாக நினைவுபடுத்திக் கொள்ளமுடியவில்லை.ஆனால் அவை வாழ்க் கையின் எல்லாக் கோணங்களையும்பெரிதிலிருந்து சிறிய கேள்விகள் வரை அனைத்தையும் உள்ளடக்கியிருந்தன என்பது நினைவிலிருக்கிறது. இருபத்திரண்டு வயதான கல்லூரிமாணவனுக்குஎனக்கு அனுப்பப்பட்ட செய் திகள் நிதர்சனத்திலிருந்து முழுமையாக மாறியதாக,சில சமயங்களில் அர்த்த மற்றதாகத் தெரிந்திருக்கிறது.இதற்கு வாழ்க்கைபற்றிய என் அனுபவமின்மை காரணமாக இருக்கலாம்.நிதர்சனங்கள் நம்மால் உருவாக்கப்படுபவையே தவிர மற்றவர்களுக்குச் சொல்வதிலில்லை.அதுதான் வாழ்க்கையின் அர்த்தம் என்பதை உணர்ந்தேன்.அப்போது எனக்கது தெரியவில்லை.அந்தப் பெண்க ளுக்கும் தான்.இருபரிமாணம் உடையவையாக அந்தக் கடிதங்கள் எனக்குத் தெரிந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் .

நான் வேலையை விடும்போது எல்லா உறுப்பினர்களும் வருத்தம் தெரிவித் தனர்.உண்மையைச் சொன்னால் அந்தவேலை என்னைக் களைப்படைய வைத்துவிட்டது.எனினும் ஒரு வகையில் வருத்தமும் ஏற்பட்டது. அதுமாதிரி உண்மையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மனிதர்களையெல்லாம் இரண்டாவது முறையாகச் சந்திக்க எனக்குக் கண்டிப்பாக வாய்ப்புக் கிடைக் காது.

ஹம்பர்கர்எனது முன்னால் கடிதத்தில் சொன்னபடி அந்தப் பெண்ணின் ஹம்பர்கரைச் சாப்பிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அவளுக்கு 32 வயது. குழந்தைகளில்லைஅவள் கணவன் உலகிலேயே ஐந் தாவது இடத்தில் இருக்கும் வியாபார நிறுவனத்தில் வேலைபார்க்கிறார்.நான் வேலையை அந்த மாத இறுதியில் விடப் போகிறேன் என்று எழுதியதை அடுத்து அவள் என்னை மதிய உணவுக்கழைத்தாள்.”சாதாரண ஹம்பர்கர் சமைத்துத் தருகிறேன்என்று சொன்னாள் .இந்த மாதிரியான தோழமைத் தொடர்புகளுக்கு நிறுவனத்தின் சட்டம் கண்டிப்பாக இடம் தராதெனினும் நான் போக ஒப்புக் கொண்டேன். இருபத்திரண்டு வயது இளைஞனான என்னால் ஆர்வத்தை அடக்கிக் கொள்ளமுடியவில்லை.

அவள் அபார்ட்மென்ட் ஒடாச்சு ரயில் தண்டவாள வழியை பார்த்த திசையில் இருந்தது.குழந்தையில்லாத தம்பதிக்கு உரித்தான சுத்தத்தில் அறைகள் இருந் தன. வீட்டி லுள்ள மரச்சாமான்கள், மின்சார விளக்குகள் அவளணிந்திருந்த ஸ்வெட்டர் ஆகியவை மிக எளிமையாகத் தெரிந்தன என்றாலும் பார்க்க நன்றாக இருந்தன. நான் எதிர்பார்த்ததை விட இளமையானவளாக இருந்தாள் என்பதில் நானும் ,நான் இளமையானவனாக இருப்பதைப் பார்த்து அவளும் ஆச்சர்யமடைந்தோம்.எங்கள் வயதை எப்போதும் வெளிப்படுத்தக் கூடாது என்பது  நிறுவனத்தின் சட்டம்.

முதலில் பார்த்தபோது இருவருக்கும் ஏற்பட்ட ஆச்சர்யத்திற்குப் பிறகு  சிறிது நேரத்தில் இயல்பாகிவிட்டோம்.ஒரே ரயிலைத் தவறவிட்டு அடுத்த ரயிலுக் காக காத்திருக்கும் இரு நண்பர்கள் போன்ற உணர்வே எங்களுக்குள் இருந் தது.ஹம்பர்கர் சாப்பிட்டுவிட்டு காப்பி குடித்தோம்.ரயிலைப்பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்,அவளின் மூன்றாவது மாடிவீட்டிலிருந்து ரயில்வே லைனைப் பார்க்கமுடியும்.பருவநிலை அன்று அருமையாக இருந்தது. மாடி வெராந்தாக்களில் படுக்கைகளும்,மெத்தைகளும் காயப்போடப்பட்டிருந்தன. மூங்கில் குச்சிகளால் பெண்கள் அதைத் தட்டும் சப்தம் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தது.எவ்வளவு தொலைவிலிருந்து அது வருகிறதென்பது கணிக்க முடியாததாக இருந்தது.

சரியான அளவு சுவையோடு,மேல்பகுதி மொறுமொறுப்பாக  உள்ளே சாற் றோடு ஹம்பர்கர் மிகருசியாக இருந்தது. அதுமாதிரியான ஹம்பர்கரை வாழ்க்கையில் சாப்பிட்டதில்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் நீண்ட காலத்திற்குப் பிறகு சாப்பிட்டதால் மிகச் சுவையானதாக இருந்தது.

காப்பி பருகியபடி Burt Bacharach இசை கேட்டோம்.இடையிலேயே எங்கள் வாழ்க்கை கதைகளையும் பேசினோம்.எனக்குப் பேசுவதற்கு அவ்வளவு விரி வான வாழ்க்கையில்லை. அவள்தான் பேசிக் கொண்டிருந்தாள்.

மாணவியாக இருந்த காலத்தில் அவளுக்கு எழுத்தாளராக வேண்டுமென்று விருப்பம் இருந்தது என்றும் Franciose Sagan தனக்கு மிகவும் பிடித்த எழுத் தாளர் என்றும் சொன்னாள். ’Do you like Brahms?” என்பது தனக்கு மிகவும் பிடித்தகதை என்றாள்.எனக்கு Sagan பிடிக்காது என்பதில்லை.அவர் நல்ல எழுத்தாளர்தான்.மற்றவர்கள் சொல்வதுபோல தரம்குறைந்தவர் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

எல்லோரும் ஹென்றி மில்லரைப் போலவோ அல்லது ஜீன்ஜெனட் போலவோ எழுத வேண்டும் என்பது சட்டமில்லை.

ஆனால் என்னால் எதுவும் எழுதமுடியாதுஅவள் சொன்னாள்.

இப்போதும் எழுத ஆரம்பிக்கலாம். காலம் இருக்கிறதுஆலோசனை சொன் னேன்

என்னால் எழுதமுடியாதென்று தெரியும்.நீங்கள்தான் நான் நன்றாக எழுத முடியாதென்று சொன்னீர்கள். உங்களுக்கு கடிதங்கள் எழுதும் போதுதான் எனக்கு அந்தத் திறமையில்லை என்றுணர்ந்தேன்அவள் சிரித்தபடி பதிலளித்தாள்..

நான் முகம் சிவந்தேன். என்னால் இப்போது அது முடியாது. 22 வயதில் நான் அடிக்கடி சிவப்பேன்.

ஆனால் உங்களுடைய எழுத்தில் நிறைய நேர்மையிருக்கிறதுஅவள் ஒன்றும் சொல்லவில்லை.எனினும் முகத்தில் சிரிப்பு கோடாகத் தெரிந் தது.”ஒரு  கடிதம்தான்  ஹம்பர்கரைச் சாப்பிடவேண்டுமென்ற ஆசையைத் தூண்டியது

நீங்கள் அப்போது பசியோடு இருந்திருக்க வேண்டும்சிரித்துக் கொண்டே பேசனாள்.

இருந்திருக்கலாம் என நினைத்தேன்.

ஒரு ரயில் தடதடவெனஅந்த ஜன்னலைக் கடந்தது.

மணி ஐந்தாகி விட்டதை உணர்ந்தேன்.நான் போகவேண்டும் என்றேன்.”உங்கள் கணவருக்கு நீங்கள் இரவு உணவு தயார் செய்யவேண்டுமே

அவர் வீட்டிற்கு எப்போதும் மிகவும் தாமதமாகத்தான் வருவார். பொதுவா கவே நள்ளிரவு கடந்துதான் வருவார்

அவருக்கு வேலை அதிகமாக இருக்க வேண்டும்

ஆமாம்ஒரு கணம் யோசித்தாள்.”என் பிரச்னை பற்றி ஒரு முறை எழுதியி ருக்கிறேன் என்று நினைக்கிறேன்.அவரிடம் நான் சொல்லமுடியாத வகை யில் சில விஷயங்கள் இருக்கின்றன.என் உணர்வுகள் அவரோடு ஒத்துப் போவதில்லை.வெவ்வேறுமொழி பேசும் இருவர் நாங்கள் என்று பலமுறை எனக்குத் தோன்றியிருக்கிறது.”

என்னிடம் அதற்கு பதில் இருப்பதாகத் தெரியவில்லை.உணர்வுகளைக் கூடப் பகிர்ந்து கொள்ளமுடியாத நிலையில் ஒருவரோடு எப்படி வாழமுடியும் என்று எனக்குப் புரியவில்லை.

அது போகட்டும்.எனக்காகக் கடிதங்கள் எழுதியதற்கு நன்றி.எனக்கு உண்மை யாகவே அவை மிகவும்பிடித்திருந்தன. உங்களுக்கு பதிலெழுதுவது எனக்கு விமோசனமாகத் தெரிந்தது. ”என்று எல்லாம் சரியாக இருப்பதைப் போலச் சொன்னாள்.

நானும் உங்கள் கடிதங்களை ரசித்தேன்.” அவள் என்ன எழுதினாள் என்பது நினைவில் இல்லாதபோதும் நான் சொன்னேன்.சிறிது நேரம் எதுவும் பேசா மல் அவள் சுவற்றிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள்.காலத்தின் ஓட்டத்தைப் பரிசீலிப்பது போல இருந்தது.

படிப்பை முடித்த பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?

இன்னும் முடிவு செய்யவில்லை.”நான் இதைச் சொன்னபோது அவள் திரும் பவும் சிரித்தாள்.”எழுத்தோடு தொடர்புடைய ஏதாவது வேலை செய்யலாம். உங்கள் விமரிசனங்கள் நன்றாக எழுதப்பட்டவை.நான் அவற்றை எப்போதும் எதிர்பார்த்துப் படிப்பேன்.இதில் எதுவும் புகழ்ச்சியில்லை. உங்களுக்கு அது வேலை என்பதாக இருக்கலாம். ஆனால் அது உணர்வுகள் நிறைந்தது.நான் எல்லாவற்றையும் வைத்திருக்கிறேன்.அவ்வப்போது அவற்றை நான் திரும்பப் படிப்பதுண்டு

நன்றி. ஹம்பர்கருக்கும் நன்றிஎன்றேன்.

பத்து வருடங்களுக்குப் பிறகு நான் எப்போது ஒடாச்சு ஒடாச்சு தண்டவாளம் அருகே இருக்கும் அந்த அபார்ட்மென்ட்டைக் கடந்து செல்லும் போதும் அவ ளுடைய மொறு மொறுப்பான ஹம்பர்கர் ஞாபகத்திற்கு வரும். தண்டவாளத் தின் அருகேயுள்ள கட்டிடங்களைப் பார்த்து எந்த ஜன்னல் அவளுடையதாக இருக்கும் என்று கேட்டுக் கொள்வேன்.அந்த ஜன்னலை மனதில் வைத்துக் கொண்டு யோசிப்பேன். ஆனால் நினவுக்கு வருவதில்லை.

அவள் அங்கு இல்லாமலிருக்கலாம்.அங்கிருந்தால் இன்னமும் Burt Bacharach கேட்டுக் கொண்டு ஜன்னலின் அந்தப் பக்கத்தில் இருப்பாளோ?

நான் அவளோடு அன்றைய பொழுதைக் கழித்திருக்க வேண்டுமோ?

அதுதான் இந்தப் பகுதியின் மையக்கேள்வி.

அதன் விடை எனக்கு அப்பாற்பட்டது.இப்போதும் எனக்கு அது குறித்து  தெளிவில்லை.எவ்வளவு ஆண்டுகளானாலும், எவ்வளவு அனுபவமிருந்தாலும் பல விஷயங்கள் நமக்குப் புரிவதில்லை.அந்தக் கட்டிடங்களில் அவளுடைய ஜன்னல் எதுவாக இருக்கும் என்று ரயிலிலிருந்து நான் பார்க்கலாம்.சில சமயங்களில் ஒவ்வொரு ஜன்னலும் அவளுடையதாக இருக்குமென்று தோன்றும்.சில சமயங்களில் எதுவும் அவளுடையது இல்லையென்று தோன்றும்.

அவை அதிகமாகவே   இருக்கின்றன.

ஜப்பானியமொழி சிறுகதை

மூலம் : ஹாருகி முரகாமி [Haruki Murakami ]

ஆங்கிலம் : ஜே.ரூபின் [ Jay Rubin ]

தமிழில் : தி.இரா.மீனா

ஜப்பானிய மொழி படைப்பாளியான ஹாருகி முரகாமி [ 1949— ]சிறுகதை, நாவல்.கட்டுரை,மொழிபெயர்ப்பு என்று பன்முகம் கொண்டவர். ஜப்பானியப் பண்பாட்டின் வெளிப்பாடாக மட்டுமின்றி அவர் படைப்புகளின் பார்வை உலகளாவியதாக இருக்கிறது.தனிமனித சுயத்தின் இயல்பு என்ன?வெற்றி, மகிழ்ச்சி ஆகியவைகளுக்கு உலகளாவிய விளக்கம் என்ன? என்று இது போன்ற வினாக்களை எழுப்பிச் சிந்திக்க வைப்பதாக அவர் படைப்புகள் அமைகின்றன. Norwegian Wood Kafka on the Shore South of the Border, West of the Sun கியவை அவருடைய படைப்புகளில் சிலவாகும்.பல விருதுகள் பெற்றவ ரெனினும் Franz Kafka Prize ,Hans Christian Andersen Literature Award. Jerusalem Prize ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.