[stextbox id=”info” caption=”யூகேவுக்குத் தேவை ஐரோப்பா”]
ஐரோப்பாவுக்கு யூகே தேவை அதனால் எப்பாடுபட்டாவது பிரக்ஸிட்டைத் தடுக்கும் என எதிர்பார்த்திருந்த அரசியல் ஆய்வாளர்கள் கடந்த ஜூன் மாதம் பிரக்ஸிட்டுக்குச் சாதகமாக ஓட்டு விழுந்தது முதல் யூகேவுக்குத்தான் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை உணரத் தொடங்கிவிட்டனர். வர்த்தகத்துக்கு சரியான எதிர்காலத்திட்டங்கள் இன்னும் உருவாகவில்லை. தாராளமய சந்தை எனும் காரட்டைக் கொடுத்து பிரிட்டனிலிருந்து விலக நினைக்கும் தொழில்களை தடுத்துவிடலாம் எனும் நினைப்பில் 120 மில்லியன் பவுண்டுகள் பட்ஜெட் பற்றாக்குறை பூதாகரமாக விடிந்திருக்கிறது. ஊதிப்பெருக்கப்பட்ட நிதி நிலையும், ஐரோப்பிய ஒன்றியத்தோடு ஒரே சந்தையில் ஈடுபட முடியாமையும் வர்த்தகத்தை அதிகமாக பாதித்துள்ளது. இன்றும் அரசு தரப்பிலிருந்து எவ்விதமானத் தெளிவான திட்டங்களும் வராத்தால் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வங்கிகளும் செல்திசையறியாது தவிக்கின்றனர்.
[/stextbox]
[stextbox id=”info” caption=”இந்தோனேஷிய காட்டழிவு”]
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 130 மில்லியன் ஹெக்டர் காடுகள் இந்தோனேஷியாவில் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் எட்டு புட்பால் திடல் அளவுக்கான காடு சாம்பலாகிறது. கிடைத்த ஒவ்வொரு சதுர அடியும் புது நகரங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் உருவாகியுள்ளன. காட்டுத்தீயை உருவாக்குவதே மிகச் சுலபமாக தரிசு நிலங்களாகவும், கட்டிடங்களாகவும் மாற்றுவதற்கான சுலபமான வழி எனக் கண்டுகொண்டிருக்கும் அரசும் தனியார் மையங்களும் காட்டுத்தீயில் குளிர்காய்கிறார்கள். இதனால் தெற்காசியாவில் நச்சுக்காற்று அதிகமாகி பிராணவாயு அதிவேகமாக மாசுபட்டுவருகிறது. அதுமட்டுமல்லாது நெருப்பில் பறக்கும் சாம்பல் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு கான்சர் அதிகரிக்கிறதாம். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பெரு அரசுகள் இருந்தாலும் தனியார் அமைப்புகள் பலவும் தொடர்ந்து தங்கள் வாழ்வை தியாகம் செய்து இதற்கு எதிராகப் போராடி வருகின்றன. அப்படிப்பட்ட நாலு குழுக்களைப் பற்றிய மிகவிரிவான சித்திரத்தை இந்தக் கட்டுரை நமக்குத் தருகிறது:
http://www.spiegel.de/international/tomorrow/a-1116644.html
[/stextbox]