தோல்வியின் பாடல், காத்திருத்தலின் காட்சிகள் கவிதைகள்

%e0%ae%aa%e0%af%82%e0%ae%a9%e0%af%88
காத்திருத்தலின் காட்சிகள்
பூனைகள் சேர்ந்திருந்து
பேசிக்கொண்டிருந்த ஒரு
பனி பொழியும் காலை நேரம்
மரத்திலிருந்து தவறி அந்த
மரங்கொத்தி தரை விழுந்தது
 
வேறொரு மரமிருந்து மரநாயொன்று
பரபரத்து இறங்கி
பறக்க எத்தனித்த
மரங்கொத்தியைக் கவ்வியபடி
மரமேறிப்போனது ..
பூனைகள் பேச்சினை நிறுத்தி
சற்று நேரம் மவுனம் காத்தன..
 
யார் எப்பூவில் தேன் குடிக்கவென்று
தேன் சிட்டுகளுக்கும்
தேனீக்களுக்குமிடையே
போட்டி நிலவ..
 
மரக்கிளையசையாத பெருமவுனம்
சூழ்நிலை இறுக்கத்தை 
விரிவாக்க..
இலைகளில் இருந்து
புற்களில் சொட்டும்
பனித் துளிகளின்
மென்சத்தம் கேட்கிறது..
 
உள்ளங்கைகளைத் தேய்த்து
கன்னங்களில் வைத்துக்கொண்டு
நான் காத்துக்கொண்டிருக்கிறேன்
பனி மூடிக்கிடக்கும் அந்த  அந்த
காலை நேரத்தில்
அவளின் வருகைக்காக
notes
தோல்வியின் பாடல்
முன்பொரு நாள் தோல்வியின்
பாடலுக்கான இசைக்குறிப்புக்களை
அந்த குறிப்பேட்டில் எழுதி
வைத்திருந்தேன்.
இன்று யதேச்சையாக அதை காண
நேர்ந்தது.இசைக்குறிப்பை என்னில்
இசைத்துப் பார்த்தேன்.
இதயமொரு அனிச்சை பாடலை
பாடியது.
சந்தேகக் காடுகள் சூழ
கண்ணாடியில் என்னை காண
விரைந்தேன்.
கை கால் முளைத்த வயலினாக
நின்று கொண்டிருந்தேன் தனியாக.