[stextbox id=”info” caption=”நிற வெறியர்கள்”]
மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவின் பல்கலைகழகத்தில் பிரனாப் முகர்ஜி திறந்து வைத்த மகாத்மா காந்தி சிலையை அப்புறப்படுத்துவதற்கான கோரிக்கைமனுவை மாணவர்களும் பேராசியர்களும் தாக்கல் செய்துள்ளனர். 1893ஆம் வருடம் தென்னாப்பிரிக்காவில் வாழத்தொடங்கிய காந்தியின் சத்யாகிரக பணியானது முழுமையாகச் செயல்வடிவம் எடுத்தும் கானாவில் தான். தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்தபோது இந்தியர்களைவிடத் தாழ்ந்தவர்களாக கறுப்பின மக்களை அவர் மதித்ததாக அவரது எழுத்தில் கிடைக்கும் சில சான்றுகளே இதற்குக் காரணம். அதுமட்டுமல்லாது சுசானா அருந்ததிராய் போன்ற சிந்தனையாளர்களும் இதே கருத்தை முன்வைப்பதால் உலகளாவிய முற்போக்கு சிந்தனையாளர்கள் பலரும் காந்தியைத் தூற்றுவதற்கு மேலும் ஒரு சாக்கு கிடைத்தது. இன்றளவும் அரசியல் கருத்துகளையும் அதன் வரலாற்றையும் அலசும் இடங்களில் காந்தியும் அவரது அஹிம்சை கொள்கைகளும் ஆழமான விவாதங்களை உருவாக்கி வருவதைப் பார்க்கிறோம். பிரித்தானியர்களின் மூளை எனக்கருதப்பட்ட சர்ச்சில், இத்தாலியர்களின் வீரனான கரிபால்டி போன்றவர்களின் சிந்தனைகள் பின்னுக்குத்தள்ளப்படுவதையும் காந்தியின் வழிமுறை இன்றும் சமூக ஆர்வலர்களுக்கு உறுதுணையாக இருப்பதையும் கணக்கில் கொண்டால் ஆப்பிரிக்காவின் இந்தப் போக்கு அரசியல் பிரக்ஞையற்றவர்களின் செயல்திட்டமாக மட்டுமே கொள்ள முடியும். அவரது சிலையை அகற்றுவதன் மூலம் ஆப்பிரிக்க வரலாற்றில் காந்தியின் பங்கைக் குறைத்து மதிப்பிடலாம் என முற்போக்கு குழுக்கள் நம்புகிறார்களோ என்னமோ?
https://www.theguardian.com/world/2016/sep/22/petition-calls-for-gandhi-statue-to-be-removed-from-ghana-university
– Petition calls for Gandhi statue to be removed from Ghana University | World news | The Guardian
[/stextbox]
[stextbox id=”info” caption=”சூடான் நாட்டைப்பீடித்திருக்கும் வியாதி”]
முந்தைய செய்தி நடைபெற்ற கானா நாட்டுக்கு அருகே இருக்கும் புது நாடான சூடான் பற்றிய செய்தி இது. ஆப்பிரிக்க கண்டத்தின் இன்றைய அரசியல் நடவடிக்கையைத் தெரிந்துகொள்ள சூடான் நாட்டு உள்நாட்டுக்கலவரம் போதும். குடிக்க நீரில்லாது பலநூறு கிலோமீட்டர்கள் கடந்து நீர் எடுத்துவரச் செல்லும் சிறுவர் சிறுமியர் கூட்டம் ஒரு புறம், சரியான ஊட்டச்சத்து கிடைக்காது உடலில் வியாதியோடு வலம் வரும் குழந்தைகள் மறுபுறம் என 99 சதவிகித மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காது ஜீவித்திருக்கும் கூட்டம். தரிசு நிலம் பாளம் பாளமாகப் பிரிவது போல உள்நாட்டுக்கலவரங்கள் புது அரசைக் கூறுபோட்டுக் கொள்ளும் சித்திரத்தை இக்கட்டுரையில் வாசிக்கலாம். கிட்டத்தட்ட முழு ஆப்பிரிக்காவிலும் இதுதான் நிலைமை. இப்படிப்பட்ட அரசியல் சீர்க்கேட்டை வைத்துக்கொண்டு காந்தியின் சிலையை அகற்றுவதில் தீவிரமாகச் செயல்படும் அரசியல் வெக்கக்கேட்டைக் கொண்ட நாடும் இதே கண்டத்தில் தான் இருக்கிறது என்பதை என்னவென்று சொல்ல?
http://www.prospectmagazine.co.uk/features/the-stillborn-state-south-sudan-civil-war
– South Sudan: the stillborn state | Prospect Magazine
[/stextbox]
[stextbox id=”info” caption=”சீனத் திரையின் அழிவுச்சித்திரத்தின் நிழல்”]
இக்கட்டுரை உலக புரட்சி இயக்கம் எனும் கனவை விதைத்து உருவாகிய அமைப்புகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளை ஆராய்கிறது. பெரும் புரட்சிகள் அனைத்தும் ஏதேனும் ஒரு வகையில் அழிவுப் பாதைக்குக் கொண்டு சேர்க்கும் என்பதை உணர்ந்தாலும் விட்டில் பூச்சிகளாக புரட்சி இயக்கங்களுக்கு உண்டான மயக்கங்கள் இன்றளவும் சாத்தியம் ஆகின்றன. இதை தோற்ற மயக்கம் எனச் சொல்வதா அல்லது நமது தலைவிதி எனக்கொள்வதா? ஆனாலும், அழிவுக்குச் செல்லும் பாதை எப்படி தேன் தடவிய வார்த்தைகளாலும் மாய்மாலங்களாலும் போடப்பட்டிருக்கிறது என்பதைப் படிக்கும்போது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்ளும் சித்திரம் படிகிறது. சீன புரட்சியின் நவயுக நாட்களான 1966ஆம் வருட மாவோ புரட்சி தனது கோரக்கைகளை மறைத்துக்கொள்ள எப்படி அழகாக வடிவமைக்கப்பட்ட புத்தகத்தில் சுருதி போல சுருக்கமான வார்த்தைகளில் அன்பொழுக அச்சிடப்பட்டிருந்தது என சுட்டுகிறது; அதே போன்று எகிப்திய புரட்சியிலும் Milestones எனும் புத்தகம் குரானின் நிழலில் உருவாக்கப்பட்ட வாசகங்களாகத் தன் அரசியல் பிரகடனங்களைச் சுருக்கமாக அச்சிட்டு மக்களை ஏமாற்றி அழித்த சித்தி்த்தையும் காட்டுகிறது:
http://www.tabletmag.com/jewish-news-and-politics/213767/euripides-mao-and-qutb
– Paul Berman: How Virulent Contagions of Political Fanaticism Spread Across the Globe – Tablet Magazine
[/stextbox]