உருவாக்கம்: ரங்கநாத் கிருஷ்ணமணி
2014 பொதுத்தேர்தலில் இந்தியா வளர்ச்சியெனும் தாரகமந்திரத்தை தன் புதிய அரசின் மூலம் உறுதி செய்துகொண்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக படையெடுப்புகளாலும், காலனியாதிக்கதிலும் இருந்து 68 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலையை அடைந்துவிட்டாலும் , கடந்த இருபது வருடங்களில் தான் மூன்றாம் உலக நாடு என்ற நிலையிலிருந்து வளரும் நாடு என்ற திசையை நோக்கி நகர்ந்திருக்கிறது. இந்திய மக்கள், தற்போதைய அரசாங்கம் அதிவேக வளர்ச்சியை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும்போது பொறுமை குறைவாக இருப்பது வழக்கம்தான். அதேவேளையில், எதிர்கட்சிகளும், ஊடகங்களும் இணைந்து குறுகிய காலத்திலேயே மிக அதிக திசைதிருப்பல்களை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றன. தற்போதைய அரசும் அதன் பெரும்பான்மையான சமூக மற்றும் பராம்பரியப் பெருமையும் கொண்ட தலைவர்களும், இந்தியா உலகுக்கே முன்னோடியாக, வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். காலனியாதிக்கத்துக்கு முன்பிருந்த இந்தியாவின் நெடிய பாரம்பரியம் அச்சிந்தனையை உறுதியாக்குகிறது. இந்தியா அத்தகைய ஒரு நிலையை அடைய வழிகாட்டியாக மாற, இந்தியா பெறும் மாற்றத்தைக் கண்டாகவேண்டும். எத்துறையை எடுத்தாலும், பொருளாதாரம் முதல் சமூக வளர்ச்சி வரை இந்தியா ஒரு யுகசந்தியில் நிற்கிறது.
இந்தியா தனக்கான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலை, பிரட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து 1940களில் அரசு அதிகாரத்தைப் பெற்ற போதும் சந்தித்தது. துரதிர்ஷடவசமாக, சிக்கல்களைப் புறக்கணித்துவிட்டு, தனது நீண்ட நெடிய சுயபாரம்பரியத்தை ஒதுக்கிவைத்துவிட்டு சமூக, அரசாங்க, பொருளாதாரக் கொள்கைகளில், யூரோப்பியச்சிந்தனாவாதங்களையும் பிரிடிஷ் அரசின் கொள்கைகளையுமே தொடர்ந்தது. நமக்கு அதிகாரபூர்வமான வரலாற்று ஆவணங்கள் கிடைக்கும் பொதுசகாப்தத்தின் ஆரம்ப காலத்திலிருந்து 1750 வரை இந்தியா உலகின் ஆகப்பெரிய பொருளாதாரமாக இருந்திருக்கிறது. இஸ்லாமியப் படையெடுப்புகளின் போது மிகப்பெரிய சரிவைச்சந்தித்தும்கூட உலகின் ஆகப்பெரிய பொருளாதாரமாகத் தொடருமளவுக்கு இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையில் பொருளாதார வித்தியாசம் இருந்திருக்கிறது. காந்தியரும், ஆராய்ச்சியாளருமான தரம்பால் ஐந்து தொகுதிகளாக (1), வரலாற்று ஆராய்ச்சியின் மூலம், பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து குறிப்பாகக் காலனியக் காலத்தினை விவரித்து, இந்தியாவின் மேன்மையை, பண்டைய தொழில்நுட்பம், கல்வி மற்றும் விவசாயப் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தி இருக்கிறார். வரலாற்றுப் பயணக்குறிப்புகள், அரசாங்க ஆவணங்கள், சர்வேக்கள், அரசதிகாரிகளின் குறிப்புகளை வைத்து, சில வேளைகளில் கையில் நிதியின்றி கையெழுத்துப் பிரதிகள் கூட எடுத்து, கண்டறிந்து இருக்கிறார். இந்தியா உலகிற்கு விவசாயம், உற்பத்தி போன்ற துறைகளில் தொழில்நுட்பத்தை அளித்திருக்கிறது. இந்தியாவின் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மேற்கில் விவசாய மகசூல் அதிகரித்தைப்போலவே, இந்தியத் தொடர்பின் மூலம், ஐரோப்பிய சமூகங்களில் கல்வி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதை உறுதியாக நான் முன்வைக்கிறேன். மருத்துவம், நெசவு மற்றும் தறிகளில் இந்தியர்கள் மிகவும் உயந்த நிலையில் இருந்திருக்கிறார்கள். இந்தியா, உலகிற்கு நவீனத்தை அளித்த அதே நேரம் ஐரோப்பிய, இஸ்லாமிய காலனியர்களின் மூலம் கடும் அடக்குமுறைகளையும், பஞ்சத்தையும் இனவழிப்பையும் பெற்றது. தரம்பால் குறிப்பிடுவதைப்போல அதிலும் மோசமாகக் கடந்த சில நூற்றாண்டுகளாக காலனியாதிக்கவாதிகள், குறிப்பாக பிரிட்டிஷர்கள், இந்திய மனங்களிலேயே காலனியத்தின் கூறுகளை, இந்தியப் பாரம்பரியத்தின் தொன்மையையும் மேன்மையையும் அழிக்ககூடிய அளவுக்கு கொள்கைகளை வகுத்தனர். ‘காலனிய ஆழ்மனம்’ எனும் புதிய சொல்லாடலையே எஸ். என் பாலகங்காதர் உருவாக்கி அந்நிலையை ஆராய்ந்து, விளக்கி இருக்கிறார். இதுவே இன்றைய நிலையில் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால். இந்தியர்கள் தங்கள் கூட்டுமனநிலையை ஆராய்ந்து எவ்வாறு தம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வை உருவாக்கி, வளர்ச்சியையும், வளத்தையும் பெற்றனர், என்பதைக் கண்டுணர முற்படுவார்களா? கடந்த ஆறு தசாப்தங்களாக ‘நம் சொந்த’ அரசாங்கங்களின் மூலம் எவற்றைக் கற்றோம், அறிந்துகொண்டோம்? இந்தியா இதைப் பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும், அதன் விடைகளை முன்வைத்து முடிவுகள் எடுத்து, கொள்கைகளை வகுக்கவேண்டும்.
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து அரசியல் உரிமையைத் தமதாக்கி, ஆறுதசாப்தங்கள் ஆன பிறகும் இந்தியா, காலனிய அரசாங்கங்களின் கொள்கைகளையே நடைமுறைப்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டவரைவிலிருந்து எல்லாவற்றிலும் ஒருவகையிலன்றி மற்றொன்றில் யூரோப்பியச் சிந்தனா வாதத்தைப் பின்பற்றியே நடக்கிறது. இந்தியா, இச்சிந்தனாவாதம் இச்சமுதாயத்துக்கு எத்துணை அளவு பயனளிக்கும் என்று கூர்ந்து ஆய்வதில் கவனம் செலுத்தவில்லை. உருவாக்கியவர்களே முற்றும் புரிந்துகொள்ளாத, முற்றும் பொருந்தா முறைமைகளை இறக்குமதி செய்திருக்கிறோம். அரசியலமைப்பை எழுதியவர்களும் அதை உருவாக்கிய குழுமமும் விவாதங்களின் போது இச்சிந்தனாவாதங்களையும், கொள்கைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. அரசமைப்புச்சட்டத்தில் உள்ள ‘பஞ்சாயத் ராஜ்’ என்ற ஒரு உதாரணம் போதும். சட்டவரைவு உருவாக்கிய அரசாங்க-பஞ்சாயத்து அமைப்பின் தோல்வியையும், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கூட நன்கு இயங்கிய பாரம்பரியப்-பஞ்சாயத்தின் செயலூக்கம் குறித்தும் தரம்பால் ஆவணப்படுத்தியுள்ளார். அரசியலமைப்புச் சட்டவரைவை உருவாக்கும் விவாதங்களில் அரசாங்கப் பஞ்சாயத்து குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன, தன் நாட்டுக்கு ஏற்ற வகையிலான சிந்தனைகள் குறித்த, 1930களில் இருந்து நடந்த வந்த பஞ்சாயத்து குறித்த விவாதங்கள் சுட்டப்பட்டன. ஆனால் இவை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, அரசியலமைப்பு முன்வைத்த பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரமின்மை காரணமாக முழுதும் விவாதிக்காமலேயே சட்டவரைவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ராஜஸ்தானின் ஒரு கிராமத்தில், தரம்பால் அரசாங்க-பஞ்சாயத்து குறித்து ஆய்வு செய்யப் பணிக்கப்பட்டார். அங்கே எவ்வாறு அரசாங்கப்பஞ்சாயத்தால் ஒரு பொதுக்கட்டிடம் கட்டக்கூட அனுமதி அளிக்க இயலவில்லை என்பதை ஆவணப்படுத்துகிறார். அரசாங்கப் பஞ்சாயத்து அரசிடம் கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தது. ஆனால் தரம்பால் அரசாங்கப் பஞ்சாயத்தின் நடைமுறை குறித்த ஆய்வை முடித்துத் திரும்பும் வரை அனுமதி வந்து சேரவில்லை. ஆனால், பின்பு விசாரித்தவகையில் பாரம்பரிய பிஸ்பிஸ்வா பஞ்சாயத்தின் மூலம் அக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கப் பஞ்சாயத்து அப்போதும் அனுமதிக்காக காத்திருந்தது. நமக்கு ஏற்கனவே, வெறும் ஆற்றுப்படுத்தும் நோக்கில் அமைந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் தோல்வி குறித்து நன்கு தெரியும். பேராசிரியர் பாலகங்காதர் ((3) பாலு என்று பிரபலம்) இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் உருவாக்கம் குறித்து ஆராய்கையில், சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு குறித்தான விவாதங்களில் பங்கேற்றோருக்கு, சமூத நீதி என்றால் என்ன, சமூக நீதி என்பதன் சாரம் என்ன என்பது குறித்து முழுமையான புரிதல் இல்லை என்று காண்கிறார். கருத்தாக்கம், தெளிவான புரிதல் இவை இன்றி தற்காலிக மேம்போக்கான் சிந்தனைகளை வைத்தே விடுதலை அடைந்த இந்தியாவின் ஆரம்பகட்ட அரசியல் கொள்கைகள் இருந்தன. உற்று நோக்க மேலும் மேலும் மேம்போக்கான் சிந்தனைகளையும் முடிவுகளையுமே நாம் காணலாம்.
இன்றைய சமுதாயம் நவீனம் என்பதை வளர்ச்சி என்ற போர்வையிலேயே சிந்தனை செய்கிறது. முதலில் வளர்ச்சி என்பதைக்கூட நிதிப்பாதுகாப்பு என்றே கருதுகிறதோம். எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமாக நாம் உருவாக்கிய உற்பத்தித் தொழிற்சாலைகளையும், நகரங்களையும், சிற்றூர்களையும் இன்றுள்ள நிலையில் நோக்கினால் உள்கட்டமைப்பு மிகவும் பினதங்கி இருப்பது புலப்படும். பொருளாதார வளர்ச்சி என்பது அவசியமானது, வரவேற்க வேண்டியது. ஆனால், நவீனத்துவம் என்ற கருத்தாக்கத்தை இந்தியச் சமூகம் சார்ந்து நாம் ஆய்வு செய்யவே இல்லை. முந்தைய அரசியல் தலைவர்களைப் போலவே தற்போதைய நவீனம் என்பது சமூகத்துக்கும் சமூகப்பின்னலுக்கும் என்ன செய்திருக்கிறது என்ற ஆய்வை எவ்விதமான ஆராய்ச்சியையும் எத்துறையிலும் நடத்த யாரும் முற்படவேயில்லை. இந்த நவீனமயமாக்கலில் வளர்ச்சி என்பது, மிகச்சிலரையே அதுவும் ஏற்கனவே பொருளாதாரத்தில் முன்னேறியவர்களையே சென்றடைந்து, ஏனையோரை விட்டு விட்டே செல்கிறது. ஐரோப்பா தன் சாதிகளை அழித்து உருவாக்கிய புதிய சமூக அடுக்கையே இங்கும் இந்த நவீனமயமாக்கல் உருவாக்கி இருப்பதைக் காண்கிறோம். பெண்ணியம் என்பதும் இதே நவீனமயமாக்கம் உருவாக்கிய மற்றொரு கருத்தாக்கம். அது முதலில் பெண்களை சமமற்ற பங்காளிகளாகக் கருதியது, பின்பு பாலின சமத்துவமின்மையை எதிர்த்து பெண்களைத் தூண்டியும் விட்டது. பெண்கள் அவர்களின் விழுமியங்களை எதிர்த்தே போரிடத்தூண்டியது. இது குடும்பங்களில் பெரும் மனத்தடைகளை உருவாக்கி மகிழ்ச்சியின்மையை அளித்திருக்கிறது. பாரம்பரிய இந்தியாவில் பெண்கள், போராளிகளாக, அரசிகளாக, பஞ்சாயத்துத் தலைவிகளாக, வேதங்களில் பங்களித்த ஞானிகளாக இருந்திருக்கிறார்கள். இந்தியர்கள் பெண்களை ஜனனியாக, படைத்தலின் மூலமாகக் கண்டார்கள்.
இச்சிந்தனைகள் குறித்த குரல்கள் அவ்வப்போது எழுந்தாலும், பொதுவாக இக்குரல்களை ஓங்கியொலிக்கும் ஊடகங்களும், நவநவீனத்தை ஆதரிக்கும் சக்திகளும், தேசியவாதம் என்ற முத்திரையைக் குத்தி வாயடைக்கின்றன. இந்தச் சிறுங்குரல்களுக்கு சமூகம்சார்கொள்கைகளை உருவாக்குவதற்கான பலமும் இல்லை. தரம்பால் பரிந்துரைப்பதும், பாலு தேடுவதுமான இந்தியப் பாராம்பரியம் சார்ந்த சட்டகத்தில் வைத்து இக்குரல்களை ஆய்வு செய்யாவிட்டால் உண்மையான பாரம்பரியத்தின் வேர்களிலிருந்து வரும் குரலா அல்லது தற்போதைய சமூகச் சூழ்நிலையிலிருந்து வரும் தவிப்பின் குரலா என்று அறியமுடியாது.
நவீனத்துவமோ தேசம் எனும் தத்துவத்தையும் குடும்பம் என்னும் அமைப்பையும் உடைத்துக்கொண்டு இருக்கிறது. தனிமனிதனையே மிகமுக்கியமாக முன்வைக்கிறது. சமூகம் சிதைந்து, தனிமனிதக் குடிமகன்களாக இருக்க தேசம் விழைகிறது. இவ்வெதிர்காலம் குறித்த சிந்தனையற்ற, பொருளாதாரப் பாதுகாப்பு மட்டுமே வேண்டி தனிமனிதனை முன்வைத்தது பாரம்பரியக்குடும்பங்கள் சிதைந்து தனிக்குடித்தனங்களாக உருவாகக் காரணியாயிற்று. சுயநலமிக்க, முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாத ஒரு வாழ்க்கைமுறைக்காக போட்டி போட்டுக்கொண்டு இயங்குகின்றன. மக்கள் ‘நவீன’ மேற்கத்திய வாழ்க்கைமுறைக்காக எவ்விதமான புரிதலும் இன்றி தம் பாரம்பரியத்தை அழிப்பதும், எல்லாவற்றையும் மூடநம்பிக்கை கொண்டதாக, மதநம்பிக்கையாக, அறிவியல் சாராத, பிற்போக்கான, பாமரத்தனமான எள்ளலாகக் காண்பதும், இவற்றால்தான் நாம் வளர்ச்சியடையவில்லை என்று நினைப்பதும் நடக்கிறது.
நம் தாய்மொழிக்கு மாற்றாக ஆங்கிலம்-காலனியத்தின் மொழியும், தேசங்களின் மீது ஆளுமையைச்செலுத்த உருவாக்கப்பட்ட காலனியத்தின் நிறுவனங்கள் நம் பாரம்பரியத்துக்கு மாற்றாகவும் உருவாக்கியிருக்கிறது. ஒரு தேசத்தின் பாரம்பரியம் செயலிழக்கவைக்கப்பட்டு அதன் மக்கள் காலனியாதிக்கத்துக்கு ஆட்பட்டுள்ளனர். நவீனம் காலனியத்தின் புதிய ஆயுதம். தனக்கு என்ன தம் சமூகத்துக்கு அதனால் என்ன பயன் என்று நின்று நிதானித்து சிந்தனை செய்ய இடம் கொடா அதிவேகம் கொண்டதாக அது இருக்கிறது. தனிமனிதர்களோ ஒரு பொருதாளார நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்வதில் தம் வாழ்க்கையை அதற்காக அமைத்துக்கொள்வதிலும் குறியாக உள்ளனர். தேசம் என்பது அழிந்து, வரலாறு எனும் சுக்கானை இழந்து வெறும் சட்டங்களின் தொகுப்பாக அமைகிறது.
சட்டங்களோ உள்நோக்கம் கொண்ட அமைப்புகளால் அரசமைப்புச்சட்டம் எனும் பெயரில் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்துகிறது. அரசமைப்புச்சட்டம் வெறும் ஒரு ஆவணமாக, பெரும்பான்மை மக்கள் அதன் மீது விசுவாசிகளாக்கப்பட்டாலும் யாருக்கும் அது என்ன, அதன் பங்களிப்பு என்ன என்று தெரியாது. அது மிகச்சிறிய அளவிலேயே மக்களையும் அவர்களின் வாழ்வியல் முறைகளையும் பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது. இயற்கைக்கும், வாழ்வுக்கும் இயைந்த ஒத்திசைவுக்கு உறுதியளிப்பதற்கு மாற்றாக ‘நான்’ என்ற ஒன்றில் மூழ்கி, உங்களுக்கும் எனக்கும் இடையில் பகிர்ந்தளிக்கப்படுவதற்கே என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது.
பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் தான் இந்தியாவின் தொழில்மயமாக்கல் இருக்கிறது. வறுமையை ஒழித்து, அறிவியலையும் வளர்ச்சியும் அளிக்கும் நவீனம் எனும் போர்வையில் இயங்கும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களும், நிதிநிறுவன முதலைகளுமே இன்றைய புதிய காலனியர்கள். கல்வியாளர்களும், பொதுமக்களும் எவ்வகையன முன்னேற்றத்துக்கான வழிமுறையை இந்தியா முன்னெடுக்கவேண்டும் என்ற சிந்தனையை, உரையாடலை இங்கு நிகழ்த்துவதில்லை. பெரும்பான்மை இந்தியா பொருளாதார முன்னேற்றத்திலேயே கவனம் செலுத்துகிறது. கல்வியாளர்களோ மேற்கு அளித்தவற்றையே மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். ‘வல்லரசு’கள் முன்வைத்த சித்தாந்தங்கள் தோல்வியடைந்ததற்கான அத்தனை அத்தாட்சிகள் இருப்பினும், அந்நாடுகள் இன்று கடும் சிக்கல்களில் இருந்தாலும் சிறிதும் சிந்திக்காமல் அந்தக் கருத்தாக்கங்களே முன்வைக்கப்படுகிறது. இந்தியப் பெரும்பான்மை மக்களுக்கு இது உரைக்காவிடினும் அறிவுஜீவிகளும், மேற்குநாடுகளி
இந்தியா இன்று இந்தப் பெரும் மாற்றத்தை நோக்கிய பாதையில் இருப்பதற்கான காரணம் மேற்குலகை பின்தொடர்ந்து தனக்கான பராம்பரிய விழுமியங்களை இழந்து அதை மீட்டெடுக்க வழியின்றி நிற்பதாலேயே. பழுப்பு சாஹேப்புகளை உருவாக்கி பதவியில் அமர்த்தி மேற்கின் பாதையில் இந்தியா பயணிக்கவைக்கப்பட்டது. கடந்த ஆயிரம் வருடங்களின் இரண்டு காலனியாதிக்க வரலாறு மிக நீண்டது. இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் இன்றைய நிலையில் விடுதலைக்குப்பின்னும், இந்தியா பிரிட்டிஷ் காலனியப்பாதையில் தொடர்ந்தது என்பதை ஏற்றுக்கொள்வது மிகச்சுலபம். தேசபிதா மகாத்மா காந்தி திலகரின் ‘பூர்ண ஸ்வராஜ்’ஐ எதிர்த்த அதே வேளையில் நாம் ஆங்கிலேயரிடமிருந்து நிறையக்கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாட்டுமக்களுக்கு அறிவுறுத்தினார். திலகரின் புகழை அபகரிக்க நடந்த செயலாக இருப்பினும், சில வருடங்களுக்குப் பிறகு, தீவிரவாதிகளிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய அதே மிதவாத காங்கிரஸ் தலைவர்கள் ‘ஸ்வராஜ்’-சுயாட்சி சித்தாந்தத்தை ஏற்கவேண்டிவந்தது. சுதந்திர இந்தியா சுயசிந்தனாவாதிகளை காலனிய அதிகாரத்தைப்போலவே அதன் பழுப்பு சாஹேப்புகளைப் போலவே இரக்கமேயில்லாமல் வேட்டையாடியது. பிரிட்டிஷர்கள் இந்தச்சிந்தனாவாதிகளை தேசியவாதிகள், தீவிரவாதிகள் என்று வேட்டையாடினால் சுதந்திர இந்தியா இவர்களை ஹிந்துத்துவதாதி, ஹிந்து தேசியவாதிகள், காவிப்படை என்றது. மதச்சார்பின்மை என்ற போர்வையில் இவர்களை ‘மதவாதிகள்’ எனவும் மேலும் மோசமாக ‘இந்துக்கள்’ என்றே நோக்கியது. இந்திய வரலாற்றைக் கூட திரித்து, பாமரத்தனமான மூடநம்பிக்கைகொண்ட இந்தியர்களை இரட்சிக்க வந்த ‘மீட்பராக’ காலனிய அரசாங்கம் பரிசுத்தம் செய்தது. ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஐம்பது வருடங்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட வரலாறு தவறானது மட்டுமன்றி விஷமத்தனமாக வடிவமைக்கப்பட்டதையும் சுட்டுகின்றனர்.
இவற்றின் விளைவாக, இந்தியா இன்று ஏகப்பட்ட சிக்கல்களுடன் இருக்கிறது. பெரும் எண்ணிக்கையில் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். நகரங்களில் சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் உள்ளன. எல்லா நாட்டிலும் இருக்கும் அளவில் பெண்களுக்குப் பாதுகாப்பு பிரச்சனைகளும் இருக்கின்றன. உள்கட்டமைப்புத் தேவைகள் அதிகம். இவை எல்லாவற்றையும் சரி செய்ய இந்தியா சுய பரிசோதனையில் இறங்கவேண்டும், இந்தியா, அதன் மக்கள், வரலாற்றில் எங்கிருந்து வந்தோம், எப்பாதையில் பயணித்தோம் எங்கு செல்லவேண்டும் என்ற புரிதலைக் கொள்ள வேண்டும். தற்போது இந்தியா ஒரு புத்துணர்ச்சியைப் பெற்று இருக்கிறது, இவ்வேளையில் இந்தியாவைச் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து, பன்னாட்டு நிறுவனங்கள், பழுப்புக் காலனிய அடிமைகளின் அழுத்தங்கள் இன்றி, அதன் சுய தேர்வுகள் குறித்து பெரும் உரையாடல்களை நிகழத்தவேண்டும், அதுவும் உடனடியாக, ஏனெனில் காலம் அதற்காகக் காத்திராது.
[மயாங்க் ஷேகர் முன்னாள் சென்னை ஐ.ஐ.டி மாணவர். தற்போது ஒரு கணினி நிறுவனத்தில் இயக்குநராகப் பொறுப்பில் இருக்கிறார். அவர் ஒரு தேர்ந்த வாசகர், ஆராய்ச்சியாளர், மற்றும் சமூக சேவகர். ஒரு நூதன சிந்தனையாளரான மயாங்க் ஷேகர் ‘பாரதத்தின் ஆழ்மனம், புத்தி மற்றும் காலம்’ (2)குறித்து சிந்திப்பவர். தான் அடைந்துள்ள வரலாறு, தத்துவ, இந்தியத் தரிசனங்களால் இந்தியாவின் பழைய பாரம்பரியத்தை மீட்டெடுக்க முயல்கிறார். அவருடைய எழுத்துகள் மூலம் ஒரு புதிய இந்தியாவை, உலகத்தை வழிநடத்தக்கூடிய இந்தியாவை, உருவாக்க விழைகிறார்.
மயாங்க் கலிபோர்னியா மாநிலத்தில் Director of California Parents for the Equalization of Educational Material (CAPEEM) (www.capeem.org ) எனும் நிறுவத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். CAPEEM, கலிபோர்னியா கல்விக்கழக்துடன் இணைந்து பணியாற்றி , சட்ட வழிமுறைகளின் மூலம் கலிபோர்னியாவின் பாடத்திட்டங்களில் இருந்த பேதங்களை நிவர்த்தி செய்ய உதவுகிறது. மயாங்க் Educators’ Society for the Heritage of India (ESHA) (www.eshausa.org). எனும் நிறுவனத்தில் காரியதரிசியாகவும் இருக்கிறார். ]
தொடர்புள்ள சுட்டிகள்:
1) Dharampal Collected Writings in 5 Volumes https://archive.org/
2) Bharatiya Chitta, Manas and Kala, Prof DharamPal http://www.cpsindia.
3) Prof S. N. Balagangadhara https://en.
அரசியல் விடுதலையை வென்றெடுக்கும் தேசம் அதை அடைந்தவுடன் தங்களை சமன் செய்து கொண்டு நிலைப்படுத்தலை மேற்கொள்வது என்பது பெரும் சவால்.ஓர் அமைப்பு விடுதலைப் போராட்டத்தை ஒருங்கிணைக்க எவ்வளவு முயன்றதோ அதற்கு சமமான ஆற்றலும் முயற்சியும் தேவைப்படும் இடம் அது.சுதந்திரத்துக்குப் பிறகான கொள்கை வகுத்தல்களில் பிரச்சினை இருந்தது என்று கூறுபவர்கள் தாங்கள் எதை எதிர்க்கிறார்களோ அவ்வகையான மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பில் மாற்றம் கொண்டு வரவே விரும்புகிறார்கள்.அவர்கள் முன்வைத்த மாற்று என்ன-அதை அவர்கள் பரிசோதித்துப் பார்த்த இடங்கள் எங்கே என்பது யோசித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.காந்திய இயக்கம் மட்டுமே அரசியல் விடுதலைக்காக உழைத்துக் கொண்டிருந்த போதே சமூக மாற்றத்துக்காகவும் பணியாற்றியது.எந்த அரசியல் அமைப்பும் கற்பனையே செய்ய முடியாத அளவில் தனது ஆகச் சிறந்த ஊழியர்களை நிர்மாணத் திட்டங்களில் ஈடுபட பணித்தது.காந்தி மரணத்துக்குப் பின்,நேரு ஆட்சியில் ஐரோப்பிய அல்லது அமெரிக்க பாணி செயல்படுத்தப் பட்டாலும் அதன் நிர்வாகத்தின் இதயம் கதியற்றவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என்பதையே யோசித்தது.உணவுப்பற்றாக்குறையை நேரு அரசு வெற்றிகரமாக எதிர்கொண்டது-அதன் மேல் முன்வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி.எளிதில் வேறுபாடும் பூசலும் எழக்கூடிய வாய்ப்புள்ள ஒரு தேசத்தில் ஒருமைப்பாட்டு உணர்வை எதிர்மறை உணர்ச்சிகளை தூண்டி விடாமல் அரசு உருவாக்கியது.இந்திய அரசின் இயங்குமுறை மீது விமரிசனத்தை முன்வைத்து மாற்று வாய்ப்புகளைக் காட்டியவர்கள் காந்தியவாதிகளே.இரு துருவங்களாக இருப்பினும் காந்திக்கும் நேருவுக்கும் சாதாரண மனிதனின் மீதான கரிசனம் என்பது பொதுப்புள்ளியாயிருந்தது.அது முக்கியமான இடம்.அது திறந்தே இருக்கிறது.