மனித உடலின் சாத்தியங்கள்தான் எத்தனை, எத்தனை? உடல் குறைகள் ஆர்வமும் ஊக்கமும் நிறைந்து ததும்பும் உள்ளத்தை அடக்கிவிட முடியாது என்பதற்கு ரியோவில் நடந்த பாராஒலிம்ப்க்ஸ் ஓர் உதாரணம்.
செயற்கை காலுடன் எத்தனை வேகமாக ஓடுகிறார், ஒற்றைக் கை இல்லாமல் கடுமையான நீச்சல் போட்டி, ஒற்றைக்காலால் உயரம் தாண்டுகிறார். சக்கர நாற்காலிகளில் இருந்தபடி கூடைப்பந்து விளையாடுகிறார், அட கண்பார்வை இல்லாதவர், அற்புதமாக தடுப்பாட்டக்காரர்களை தாண்டி அற்புதமாக கோல் போடுகிறார். எத்தனை எத்தனை திறமை வைத்தாய் இறைவா, இவ்வுடலில், இம்மனதில், இவ்வுலகில் என்று எண்ணம் பறக்கிறது.
இந்த வருட ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்கு இரு தங்கங்கள் கிடைத்திருக்கின்றன. அதில் ஒரு தங்கம், தமிழக, சேலத்து தங்கம், நீண்ட உயரம் தாண்டிய தங்கம். ஆட்டக்காரர் உயரம் தாண்டுவதற்கும் முன்னும் தாண்டியபின்னும் அப்போதுதான் வந்து நின்ற மாலை நெரிசல் மின்சார ரயிலில் இறங்கிப்போகும் சாதாரணமாக, நொண்டி நொண்டி நடந்து போகிறார். ஆனால் உயரம் தாண்டும் போது, மொத்த உடலும் ஜிவ்வென எகிறி சிலிர்க்கிறது