ஊருக்குப்
புதிது.
ஒன்றும் சொல்வதற்கில்லை ஊரில் நிலவரம்.
நிலவும்
சங்கடமான அமைதியைக் குலைக்க ஓர் அலறல் போதும்.
பிணம் தூக்கிப் போன பின் நீரில் கழுவி விட்ட வீடு போல தெரு வெறிச்சோடிக் கிடக்கும்.
அறைக்குள்ளேயே வெகு தொலைவில் இருப்பது போல் இருப்பேன்
நான்
மட்டும்.
தற்செயலாய்த்
திறப்பேன் அறை ஜன்னலை.
சற்றும்
எதிர்பார்க்கவில்லை.
எதிர்பார்த்திருக்கும் என்னை வெளியே
முழுச் சிநேகிதத்துடன்
ஒரு
முகம்.
சிநேகிதம் சிறிதும் குறையாது சிரிக்கும் போது தான்
நிலவும்
முழு
நிலவு.