அமேசான் காடுகளில் வாழும் ஊர்வன ஜந்துக்களையும் நீர் மற்றும் நிலம் என இரண்டிலும் இயங்கவல்ல உயிரினங்களையும் அவதானிக்க மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மார்க் கொவன் (Mark Cowan) சென்றிருக்கிறார். அங்கேதான் இந்தக் காட்சியைக் காண்கிறார். முதலையின் தலை முழுக்க பட்டாம்பூச்சிகள் அமர்ந்திருக்கின்றன. முதலையின் முகத்தின் மேல் இருக்கும் உப்பை உண்பதற்காக வண்ணாத்துப்பூச்சிகள் அமர்ந்திருப்பது சாதாரணக் காட்சிதான். கனிமங்கள் அபரிதமாக இல்லாத இடங்களில் ஆமை மீதும், முதலைக் கண்ணீரையும் குடிக்க தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் அவற்றின் முகத்தினை மொய்க்கின்றன.
மேற்கண்ட படம் ராயல் பப்ளிஷிங் சொஸைட்டியின் சிறப்பு கவனிப்பைப் பெற்றிருக்கிறது. விருது பெற்றவர்களை இங்கே பார்க்கலாம்.