ஐ.நா. அறிக்கையின் படி சென்ற வருடம் மட்டும், 65.3 மில்லியன் பேர்கள் தங்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டிருக்கிறார்கள் இது இங்கிலாந்து நாட்டின் மக்கள் தொகைக்கு சமமாகும். ஃபிரான்ஸில் ஒரு குண்டு வெடித்தால், உலக ஊடகங்கள் அனைத்தும் அதை பதிவாக்கி விவரிக்கிறது. ஆனால், ஃபிரான்ஸ் நாட்டின் ஜனத்தொகைக்கு சமமானவர்கள் தங்களின் தேசத்தையும் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் பழக்கவழக்கங்களையும் விட்டு விரட்டப்படும்போது எத்தகைய சூழலை எதிர்கொள்கிறார்கள் என்பதை இங்கே தொகுக்கிறார்கள்.