குளக்கரை


[stextbox id=”info” caption=”போரும் வாழ்வும்”]

internally-displaced-peoples-idp-pakistan-war-imperialism-terrorism-taliban-us1

மானுடத் துயரத்தை விரட்டும் வழிகளில் பயணிப்பதாகப் பிரகடனப்படுத்தி மனிதர்களை வழிநடத்தும் கொள்கைகள்/தத்துவங்களும் அவற்றின் வெற்றிக்காக லட்சியவாதிகளையும், நாட்டுப்பற்றாளர்களையும், போர் வீரர்களையும் பலி கேட்பது என்பது வரலாறு நெடுக நாம் பார்த்து வருவதுதான். இரு நீண்ட யுத்தங்களில் கை கால்கள் இழந்து வீடு திரும்பியவர்கள் விவசாயம் செய்வதற்காக நிலம் வேண்டி யுத்தத்தில் கடைசிப் பணம் வரை கரைத்திருந்த அரசுகளிடம் கையேந்தி நின்றது, ஆஃப்கனிஸ்தானில் ரஷ்யா நடத்திய போரும், அங்கு வீசப்பட்ட ஏராளமான குண்டுகளும் பொடிந்த நாடாக மாறிய அவலம் இன்றுவரை அதன் மக்களைக் காவு கொள்கிறது. இந்தப் போரின் பின்விளைவுகள் அண்டை நாடுகளிலும் பெரும் அவலங்களைப் பரப்புகின்றன. பாகிஸ்தானின் பிரதான எல்லைப்பகுதியை ஊடுருவி குண்டுகள் போட்டழிக்கும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளோடு சமர் செய்துவரும் பாகிஸ்தானிய வீரர்கள் வீடு திரும்பும் பட்சத்தில் நொடிந்து போன ஊர்களை சீரமைக்கும் பணியை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு அதற்கான ஊதியமும் கிடைப்பதில்லை. நாட்டுக்காக போராடும் வீரனாக திரும்ப வருவது மட்டுமே அவனுக்கு எஞ்சும் அவலத்தைச் சுட்டும் கட்டுரை

https://www.theguardian.com/global-development/2016/aug/17/pakistanis-displaced-by-war-return-to-wrecked-homes-and-a-ruined-economy
[/stextbox]


[stextbox id=”info” caption=”அண்டை நாடுகளில் சீனா நடத்திய விமான நிலையத் தாக்குதல்”]

Chinese Hacking at Vietnam_Flights_Planes_South_China_Sea_Airports

தென் சீனக் கடல் பகுதிகளில் தான் கோரும் உரிமை செல்லுபடியாகாது என ஹேக் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்து சீனா பல கோணங்களில் எதிர்வினை ஆற்றி வருகிறது. ஒருபுறம் எப்போதும் போல அந்த தீர்ப்பைக் குறித்த வலைதளங்களை முடக்கியது. அடுத்ததாக அந்த தீர்ப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதனால எதுவும் மாறப் போவதில்லை என்றும் அறிக்கை விட்டது. பிறகு தென் சீனக் கடலின் செயற்கைத் தீவுகளின் கட்டுமானத்தை துரிதப்படுத்தி அதை பிரகடனப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக தன்னுடைய பொருளாதார, வர்த்தக குடையின் கீழ் உள்ள நாடுகள் இந்த தீர்ப்பை ஒட்டி எதிர்ப்புக் குரல் எழுப்பாதவாறு பல நடவடிக்கைகளை எடுக்கிறது. ஒருபுறம் தூதரக, வர்த்தகச் செயல்பாடுகள் மூலம் சிறு நாடுகளாகிய வியெட்நாம், ஃபிலிப்பைன்ஸ், தாய்லாந்து அரசுகள் இதைப் பெரிதாக்காமல் வைத்துக் கொண்டது.

அதையும் தாண்டி சிறு எதிர்ப்புக் குரல் எழுந்தாலும் “சீனத் தேசியவாதிகள்” என்ற போர்வையில், எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளின் நிறுவனங்களையும், மக்கள் சேவைகளையும் முடக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறது. அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் கணினிகளை ஊடுருவும் சீனர்களுக்கு இந்த சிறு நாடுகளின் இணைய கட்டமைப்புகள் ஒரு பொருட்டே இல்லை. சமீபத்தில் வியெட்னாம் விமான நிலையத்தில் சீனர்கள் நடத்திய ஊடுருவல் ஒரு உதாரணம். இந்த ஊடுருவலால் சீனா அடையும் பொருளாதார அனுகூலம் என ஒன்றும் கிடையாது. அமெரிக்க நிறுவனங்களை ஊடுருவுதல் மூலம் கிட்டக் கூடிய தொழில் ரகசியங்கள் போல வியெட்நாமில் எதும் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும் ஒரு மாஃபியா தலைவன் போல் தன்னைச் சுற்றி உள்ளவர்களை, முக்கியமாக சிறியவர்களை தன்னைக் குறித்த அச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். அந்த நாடுகளில் இயல்பாக மக்களிடம் தன்னைக் குறித்த எதிர்மறை கேள்விகள் எழ கூடாது என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்காக இதைப் போன்ற ஊடுருவல்களை நிகழ்த்தி தன் பேரிருப்பை சொல்லாமல் உணர்த்திக் கொண்டிருக்கிறது போலும்.

http://www.huffingtonpost.com/helen_clark/china-hack-vietnam-south-china-sea_b_11357330.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”லண்டனிஸ்தான்”]

Choudary_Shariah_UK_Londonistan_Afghans_Taleban_ISIS

இந்த கேன்சருக்கு மருந்து தேவை என முடித்திருப்பது மதக்கிளர்ச்சியாளர்க் குழுவின் முன்னாள் செயலாளர் எனும்போது கட்டுரை காட்டும் சித்திரம் நம்முன் பூதாகரமாக நிற்கிறது. 1990களின் தொடக்கத்திலிருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தின் கிடுக்குப்பிடிக்கு ஆளான இங்கிலாந்தும், அதற்கு ஆதரவாக கூட்டத்தைத் திரட்டிய லண்டன் இஸ்லாமிய அமைப்புகளும் இன்று பெரும்பூதமாக வளர்ந்து நிற்கும் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பைப் பார்த்து தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டனரா? அல்லது அஞ்சம் செளதரி போல் நம்பிக்கையாளர்களை வேலைக்கு எடுத்து மூளைச்சலவை செய்கிறார்களா என்பதைச் சொல்லும் கட்டுரை. இந்த அஞ்சம் செளதரி ஐநூறுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை மூளைச்சலவை செய்து இங்கிலாந்திலும் பிற நாடுகளிலும் கடந்த பத்தாண்டுகளாக நடந்தத் தாக்குதல்களுக்குச் செயல்திட்டம் தீட்டிக் கொடுத்தவன் என்று சொல்லப்படுகிறது. இன்று இங்கிலாந்து நீதித்துறை அவனுக்கு இருபது வருடங்கள் தண்டனை வழங்கியுள்ளது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜிகாதிகளின் வெறியாட்டங்களை ஊக்குவித்து வந்தவனது குற்றப்பட்டியல் நூற்றுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவும் கண்ணுக்குத் தெரியாது வளர்ந்து வந்த இந்த வலையானது இன்று தனது முழு பலத்தைத் திரட்டி ஆட்சிகளுக்கு எதிரணி அமைப்பது, சிரியா, துருக்கி போன்ற நாடுகளின் தலையாயப் பிரச்சனையாகவும் மாறியுள்ளது. சாதாரண ஜோக்கர் என நினைத்திருந்த அஞ்சம் செளதரி போன்றவர்களால் இப்படிப்பட்ட வலுவான திட்டங்களை உருவாக்கி, நம்பிக்கையாளர்களை மூளை சலவை செய்ய முடிகிறது என்றால், பெரும் அரசாக இன்று உருவாகியிருக்கும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் பலத்தை நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. அஞ்சம் செளதரி போல் பல நாடுகளில் ஒளிந்திருக்கும் விஷக்கண்ணிகள் இன்னும் எத்தனை எத்தனையோ?

http://www.thedailybeast.com/articles/2016/08/22/the-jihadi-joker-anjem-choudary-was-a-terror-mastermind.html
[/stextbox]