கடந்த ஒரு வருடமாக இக்கட்டுரைத் தொடர் சொல்வனம் இதழில் வெளிவந்ததற்குப், பல புத்தகங்கள் மற்றும் இணையதளங்கள் ஆராய்ச்சிக்குப் பின்னணியாக இருந்தது. பல விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகள் எழுதியிருந்தாலும், மிகவும் புதிய தொழில்நுட்பமாக இருப்பதால், ஏராளமான குழப்பம் இத்துறைப் பற்றி எங்கும் வியாபித்திருந்தது, மிகவும் சவாலான ஒரு விஷயம். வியாபார செய்தி கலந்த விஷயத்திலிருந்து, உண்மையான தொழில்நுட்பத்தைப் பிரித்து எடுப்பது.
இத்துறையில் வாய்ப்புகள் ஏராளம். ஓரளவிற்காவது இக்கட்டுரைத் தொடர், சில இளைஞர்களை விஷுவல் பேசிக், ஆரகிள் போன்ற அன்றாட தொழில்நுட்ப விஷயகளிலிருந்து, இத்துறையில் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியிருந்தால் அதுவே இக்கட்டுரைத் தொடரின் மிகப் பெரிய வெற்றி.
இக்கட்டுரைத் தொடரில் பல புதிய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தத் தேவையிருந்தது. சில ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களை புதிதாக உருவாக்கவும் நேரிட்டது. புதிய தொழில்நுட்பம் பற்றி தமிழில் எழுதுவதன் அலாதி அனுபவம் இது. இச்சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்
எண் | தமிழ்ச் சொல் | ஆங்கிலச் சொல் |
1 | அகன்ற வலையமைப்பு | WAN (Wide Area Networking) |
2 | அசையா தரவின் பாதுகாப்பு | Data at rest security |
3 | அசையும் தரவின் பாதுகாப்பு | Data in transit security |
4 | அடிப்படைப் பொது சாவிகள் | Raw public key |
5 | அணியப்படும் கருவிகள் | Wearables |
6 | அலைப்பரப்பி/வாங்கி | Transceiver |
7 | அழுத்த உணர்விகள் | Pressure sensors |
8 | இணைய விஷமிகள் | Internet hackers |
9 | இணையத்துடன் பாதுகாப்பற்ற தொடர்பு | Insecure web interface |
10 | இதய முடுக்கி | Pacemaker |
11 | இறுக்கும் எந்திரம் | Compactor |
12 | உடல் வருடல் | Biometric scan |
13 | உடல்நிலைத் தகுதி | Physical fitness |
14 | உணர்விகள் | Sensors |
15 | உலை/காற்றுக் கட்டுப்படுத்தி | Furnace/ air conditioner |
16 | உறுதிப்பாடு/சான்றளிப்பு | Authentication |
17 | உற்பத்தி மற்றும், தயாரித்தல் | Production and manufacturing |
18 | எரிபொருள் நுகரும் தரவு | Fuel consumption data |
19 | ஒப்பந்தக்காரர்கள் | Contractors |
20 | ஒலி உணர்விகள் | Sound sensors |
21 | ஒளி உணர்விகள் | Optical sensors |
22 | ஒளி மின் உணர்வி | Photo electric sensor |
23 | கடிகை | Timer |
24 | கட்டமைப்பு | Infrastructure |
25 | கம்பியில்லாத் தொடர்பு | Wireless connectivity |
26 | கம்பியில்லாத் தொலைப்பேசிகள் | Cordless phones |
27 | கம்பியிழை மின் குமிழ் | Filament bulbs |
28 | கம்பியுடைய தொடர்பு | Wired connectivity |
29 | கருவி அடையாளச் சாவி | Identity resolving key |
30 | கருவி இணையக் கட்டமைப்பு | IOT architecture |
31 | கருவிகளின் இணையம் | Internet of things |
32 | கருவிகள் | Devices |
33 | காந்த உணர்விகள் | Magnetic sensors |
34 | குறுஞ் செய்திகள் | Text messages |
35 | சல்லடை வலையமைப்பு | Mesh networking |
36 | சிகிட்சை மீட்சி | Post procedure recovery |
37 | சிற்றுருவாக்கம் | Miniaturization |
38 | சுழல்காட்டி உணர்விகள் | Rotation sensors or gyroscopes |
39 | செயலி | Processor |
40 | தடுக்கிதழ் | Valve |
41 | தரவு நஷ்டப் பாதுகாப்பு | Data loss prevention |
42 | தரவுத் திரள்வுப் பாதுகாப்பு | Data aggregation security |
43 | தனிப்பட்ட வலையமைப்பு | PAN (Personal Area Networking |
44 | திசைப்போக்கு | Orientation |
45 | திறன் நகரங்கள் | Smart cities |
46 | திறன்பேசிகள்/நுண்ணறிப்பேசிகள் | Smart phones |
47 | தொகுப்புத் தொழில்கள் | Assembly based manufacturing |
48 | தொடர் செய்லாக்கத் தொழில்கள் | Continuous process manufacturing |
49 | தொடர்பு கையொப்பச் சாவி | Connection signature resolving key |
50 | தொடர்பு/அசைவு உணர்விகள் | Contact/motion sensors |
51 | தொடும் விளையாட்டுக்கள் | Contact sports |
52 | தொழில்பகுதி கணினி | Plant computer |
53 | நிர்வாகக் கடவுச்சொல் | Administrator password |
54 | நிலைப்பொருள் | Firmware |
55 | நீர் வடிக்கும் உணர்வி | Water drain sensor |
56 | நீர் மட்ட உணர்வி | Water level sensor |
57 | நீர்தெளிப்பு அமைப்புகள் | Sprinkler systems |
58 | நுண்ணறி/திறன் மின்சார விளக்குகள் | Smart bulbs |
59 | பகிர்மானம் | Distribution |
60 | பங்குச் சாவிகள் | Shared key |
61 | பயனில் உள்ள தரவின் பாதுகாப்பு | Data in use security |
62 | பயன்பாட்டாளர் அனுபவம் | User experience |
63 | பயன்பாட்டுப் பாதுகாப்பு | Application security |
64 | பாகுநிலை | Viscosity |
65 | பொட்டலக் காகிதம் | Packaging materials |
66 | பொதுப் பயனுடைமை | Public utilities |
67 | பொருள் சார்ந்த பாதுகாப்பு | Physical security |
68 | பொறியியல் பிரத்யேகத் தயாரிப்புத் தொழில்கள் | Engineering job order |
69 | போக்குவரத்துச் சிறுபாதை | Traffic lanes |
70 | மருத்துவ சேவைகள் காப்பீடு | Medical insurance |
71 | மருந்தாளுனர் | Pharmacist |
72 | மருந்துகளை அளந்து தரும் வழங்கி | Medicine dispenser |
73 | வடஞ்சுழியான மரை | Clockwise threads |
74 | மறுபயன்பாட்டுப் பொருள்கள் | Recycling materials |
75 | குறிமறையாக்க முறைகள் | Encryption methods |
76 | குறிமறையாக்க முறையின் பலம் | Encryption strength |
77 | மானிகள் | Instruments |
78 | மின் உப பகிர்மான நிலையங்கள் | Electrical sub stations |
79 | மின் பகிர்மான நிலையங்களுக்கு | Electrical distribution centers |
80 | மின்சார டிஜிட்டல் நுண்ணறியளவிகள் | Smart (electrical) meters |
81 | மின்மாற்றிகள் | Transformers |
82 | வளையும் மின்னணுவியல் சுற்றுக்கள் | Bendable electronic circuits |
83 | முகப்புப் பெட்டி | Dashboard |
84 | முடிவாற்றல் பொறிகள் | Decision support tools |
85 | முன் பங்குச் சாவிகள் | Pre-shared key |
86 | மேகக் கணிமை வழங்கி | Cloud data server |
87 | ரசாயன உணர்விகள் | Chemical sensors |
88 | ரத்த பிராணவாயு அளவு | Blood oxygen level |
89 | வடிவமைப்பு | Design |
90 | வட்டார வலையமைப்பு | LAN (Local Area Networking |
91 | வருமுன் பராமரிப்பு | Preventive maintenance |
92 | வலையமைப்புப் பாதுகாப்பு | Network security |
93 | வழங்கி வயல் | Server farm |
94 | விளிம்பு கணிமை | Edge computing |
95 | வெப்ப உணர்விகள் | Temperature sensors |
96 | வெப்பச் சீர்நிலைக் நுண்ணறிக்கருவி | Smart thermostat |
97 | வெற்றுத் துப்புரவாக்கி | Vacuum cleaner |
கட்டுரையில், கடைசியில் சுட்டிகளைத் தருவதாக எழுதியிருந்தேன். சில சுட்டிகள் எளிமையான ஆரம்ப நிலைக் கட்டுரைகள் மற்றும் காணொலிகள். மற்றவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் – மிகவும் டெக்னிகலானவை. முடிந்தவரை, இவற்றைப் பிரித்து ஒரு நட்சத்திர மதிப்பீட்டுடன் இங்கே அளித்துள்ளேன். அதென்ன நட்சத்திர மதிப்பீடு?
நட்சத்திர மதிப்பீடு | விளக்கம் |
* | ஆரம்ப நிலை புரிதலுக்கான சுட்டி |
** | சற்று விவரமானது. அவ்வளவு டெக்னிகல் அறிவு தேவையில்லை |
*** | மிக விவரமானது. கொஞ்சமாவது டெக்னிகல் அறிவு தேவை |
**** | மிகவும் டெக்னிகலான ஆராய்ச்சிக் கட்டுரை |
சுட்டிகள்/மேற்கோள்கள்
தொடர்ந்து இக்கட்டுரைத் தொடர் வெளிவர ஊக்கமளித்த ’சொல்வனம்’ ஆசிரியர் குழுவிற்கு நன்றி. இங்குள்ள சுட்டிகள் இத்துறையில் புதிதாக ஆர்வமுள்ளவர்கள் மேல்வாரியாக அறிந்து கொள்வதற்கு மட்டுமல்லாமல், ஆழமாகப் புரிந்து கொள்ளவும் வழி செய்யும் என்று வெளியிட்டுள்ளேன். ஒவ்வொரு விஞ்ஞான/தொழில்நுட்பக் கட்டுரையின் பின்னணியிலும் இத்தகைய ஆராய்ச்சி இருந்தாலும், விரிவாக இங்கு வெளியிடுவதற்குக் காரணம், புதிய இத்துறையில், தமிழ் படிக்கத் தெரிந்த இளைஞர்(ஞி)கள் பிரகாசிக்க வழி வகுக்கலாம் என்ற நம்பிக்கையே.
very interesting.. But lots of tamil words were tough to understand. Good that it is published now. Would be good if a small book/PDF is released on this
எளிமையாகவும் எண்ணற்ற தகவல்களைக் கொண்டதாகவும் இருந்தது. புதிய தமிழ் சொற்களைக் கற்றுக்கொள்ள உதவியது.