ஒளி இடுக்கி-கண்டு பிடித்த இயற்பியலாளர் ஸ்டீவன் சூவுடன் ஒரு பேட்டி

இயற்பியலில் கண்டு பிடிப்புகளுக்காக 1997 இல் நோபல் பரிசு பெற்ற ஸ்டீவன் சூ, கலிஃபோர்னியா பல்கலையின் பெர்க்லி நகர வளாகத்தில் தொலைக்காட்சி நிகழ்வொன்றுக்குக் கொடுத்த பேட்டி இது.

ஸ்டீவன் சு சீன வம்சாவளியைச் சேர்ந்தவர், ஆனால் அமெரிக்காவில் வளர்ந்து கல்வி பயின்றவர். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி ஏற்றபோது ஸ்டீவன் சு அவரது நிர்வாகக் குழுமத்தில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-2013 வருடங்களில் இவர் அமெரிக்க கூட்டரசின் சக்தி இலாக்காவின் செயலராகப் பணியாற்றினார். பிறகு தன் முந்தைய பணியிடமான ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கு இயற்பியல் ஆராய்ச்சிப் பணிக்கு மறுபடி திரும்பிச் சென்றார்.

இவரது நோபெல் பரிசு இளைஞராக இவர் கண்டு பிடித்த ஒரு முக்கியமான பொறிநுட்பக் கருவிக்காகவும், அந்த வழி முறைக்காகவும். அணுவளவில் இயங்கி அணுக்களை எப்படி இடுக்கியால் கைப்பற்றுவது என்ற முயற்சியை பல பத்தாண்டுகளாகப் பலர் முயன்று பார்த்துக் கைவிட்டிருந்தனர். அந்த முயற்சியைத் தொடர்ந்து ஆய்வு செய்து, அதில் வெற்றி பெற்றார் ஸ்டீவன் சு. இவரது கண்டுபிடிப்பான ஆப்டிகல் ட்வீஸர் என்ற இடுக்கியைப் பற்றி இந்த இதழில் உள்ள ’ஒளி-ஒரு குறுஞ்சரித்திரம்’ என்ற கட்டுரையில் படிக்கலாம். ஸ்டீவன் சு பற்றிய மேல் விவரங்களுக்கு இந்தச் சுட்டிகளைப் பார்க்கலாம்:

இவருடைய தற்போதைய ஆராய்ச்சிகள் பற்றி அறிய: The Chu Group: Research