இரு கவிதைகள்

ganesh-art_00109592
அத்வைதம்
துதித்தேன் மாதங்க முகத்தவனை இடத்தமர்
சதியாள் வல்லபை அணைத்தவனை – குங்குமமனைய
சோதியாய் மிளிர்பவனை குவளையலர்த்தும் கலை
மதியினை சிரமதில் தரித்தவனை !!!
இருப்பதொன் றன்றி பிறிதொன் றில்லை
இருப்பிற் கில்லாமையும் யில்லாமைக் கிருப்புமுண்டோ ???
விருப்பமுடன் ஒருமையாய் ஒன்றனையே யுன்ன
கருப்பொருளாய் அனைத்திற்கு முணர்வோமே !

***

வனமோ !   வளமை  வனப்போ
கிளி  கொஞ்சும் சோலையுங்
கவின் மயிலடுதுறையும்
தூளி யாடியும் தேன் சிட்டும்
உழைத்துக் களைத்த மனிதனுக்கு
ஒளி யுமிழும் கண்ணும்
ஆற்றலும் நல்கிப் பேருவகையால்
உளி தருஞ் சிலையெனடி
மனக் கோயிலை வடியமைக்கும் !
துளி  நீரைத் தண்முகிலாக்கித்
தருக்களால்  தாங்கி மழையாக்கும் !
மூளி யிலாமுது  நிலத்தைப்
பசுமை கூட்டி இளமையாக்கும் !
நெளி  மண்புழு முதல்
நெடு வல்லானை வரை
களி கூட்டி உணவூட்டி
அயர்வு நீக்க நிழலாகி
வெளி உலகின் வண்ணம்
பெருக்கிடும் வனம் வளர்ப்பீர்  !!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.