[stextbox id=”info” caption=”மகிழ்ச்சி!”]
எப்படி மகிழ்ச்சி ஆகிறோம் என்பதைக் குறித்தும், எவ்வாறு மகிழ்ச்சிக்குள்ளாகிறோம் என்னும் வழிமுறையைக் குறிவைத்தும் கோடிக்கணக்கில் ஆராய்ச்சிகள் இருக்கின்றன. ஆனால், மகிழ்ச்சி என்னும் தேர்வைத் தந்தால் அந்த வழி சொல்வோமா என்பதை ஆராய்ந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சாதாரண மக்களுக்கு சந்தோஷம் முக்கியமா? அந்த சந்தோஷத்திற்கு பதிலாக செல்வம் முக்கியமா? தேக ஆரோக்கியம், சந்தோஷம், செல்வம் ஆகிய பலவற்றில் எந்த வளங்களை மனிதர் அதிகமாக விரும்பித் தேர்வு செய்கிறார்கள்? அமெரிக்காவிலும், பிரிட்டனிலும், சுமார் 13,000 பேர் நடுவே கருத்துக் கணிப்பு செய்ததில் கிட்டிய முடிவுகளை இந்தக் கட்டுரை ஆராய்கிறது.
மரபணு ஆய்வில் மக்களிடையே சந்தோஷத்தை உணர்வதில் உள்ள வேறுபாடுகளும் மரபணுக்களில் உள்ள மூன்று வேறுபாடுகளும் ஒத்திசைவதாகக் கண்டுபிடித்துள்ளனர் ஆம்ஸ்டர்டாமில் ஒரு ஆய்வு மையத்தில். இது எத்தனை தூரம் உண்மையாக இருக்கும்?
[stextbox id=”info” caption=”கரியமிலவாயுவிற்கு பூட்டு”]
உலகம் வெப்பமயமாகிக் கொண்டிருக்கிறது என்ற கூக்குரல்கள் ஒரு புறம் எழுந்த வண்ணம் இருந்தாலும், அதைத் தடுப்பதற்கான உறுதியான வழிகள் இன்னும் கண்டறியப்படவில்லை. புவி வெப்பமயமாவதற்கு முக்கியக் காரணமான கரியமில வாயுவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகள் சொல்லப்பட்டாலும், நாள்தோறும் அதிகரித்து வரும் தொழிற்சாலைகளினால் வளிமண்டலத்தில் கலக்கும் இந்த வாயுவின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர குறையவில்லை. ஆண்டுதோறும் சுமார் 40 பில்லியன் டன் கரியமில வாயு மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்டு வளிமண்டலத்தில் கலக்கிறது.
ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்ஜாவிக்கில் உள்ள நிறுவனம் ஒன்று பூமியின் ஆழத்தில் செலுத்தி அதை பாறைகளாக மாற்றும் தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துவிட்டதாகத் தெரிவிக்கிறது. இதன் மூலம் அந்த வாயு வளிமண்டலத்தில் கலப்பது தடுக்கப்படுகிறது. இதில் கரியமில வாயு தண்ணீருடன் சேர்த்து பூமியின் உள்ளே செலுத்தப்படுகிறது. எரிமலைகள் நிறைந்த ஐஸ்லாந்தில் பூமிக்கடியில் கால்சியம், மெக்னீசியம், இரும்பு ஆகிய தாதுக்கள் உள்ளன. தண்ணீருடன் சேர்ந்த கரியமில வாயு இவற்றுடன் வினை புரியும்போது சுண்ணாம்புக்கல் போன்ற கார்போனேட் பாறைகள் உருவாகின்றன. மற்ற முறைகளில் கரியமில வாயு திரவமாகவும் வாயு வடிவத்திலும் சேமிக்கப் படுவதால் அது ‘தப்பித்து’ மீண்டும் வளிமண்டலத்தில் கலக்கும் அபாயம் அதிகம். எனவே திட வடிவில் அந்த வாயுவைச் சேமித்துவைக்கும் இந்த முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது.
ஆனால், இதிலும் சில குறைபாடுகள் உண்டு, ஒரு டன் கரியமில வாயுவிற்கு கிட்டத்தட்ட 25 டன் தண்ணீர் செலவாகிறது. இதற்கு உப்பு நீரையும் பயன்படுத்த முடியும் என்பதால் இது ஒரு பெரிய விஷயமில்லை என்கின்றனர் இந்த தொழில் நுட்பத்திற்கு ஆதரவாக வாதிடுவோர். இருப்பினும், இதை பெரிய அளவில் விரிவுபடுத்த முடியுமா, மேற்குறிப்பிட்ட தாது உப்புக்கள் அதிகம் காணப்படாத நாடுகளில் இந்தத் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் சரியான விடைகள் கிடைக்கவில்லை.
[stextbox id=”info” caption=”ஸ்விஸ் டூயட்”]
கிளவுட்ஸ் ஆஃப் சில்ஸ் மரியா (Clouds of Sils Maria) என்னும் படமும் ஸ்விட்சர்லாந்தில் படமாகிறது. தில்வாலே துல்ஹானியா லெ ஜாயேங்கே (Dilwale Dulhania Le Jayenge – DDLJ)வும் ஸ்விஸ்ஸில் படமாகிறது. எந்தப் படத்திற்கு பனிச்சறுக்கு மலையின் உச்சியில் ஆளுயுர பிரும்மாண்ட கட் அவுட் வைத்திருக்கிறார்கள்? விடையை மேலே பார்த்திருப்பீர்கள். இருநூறு படங்களுக்கு மேல் இங்கே படமாகியிருக்கின்றன. ஏன்? காஷ்மீர் பிரச்சினை காரணமா அல்லது வெள்ளைத் தோல் கொண்டவர் நமக்கு சிப்பந்தியாக அடிபணிவது காரணமா என்னும் கேள்விகளை இந்தக் கட்டுரை எழுப்புகிறது. உள்ளூர் சிம்லாவில் படப்பிடிப்பை வைத்தால், கால்ஷீட்டை மட்டும் கொடுத்துவிட்டு டிமிக்கி தருபவர்களை மலைப் பிரதேசங்களுக்குக் கொண்டு சென்றால், நாயகன் / நாயகி காணாமல் போகும் தொல்லையில்லாமல் சிக்கனமாக நேரத்தே காட்சியமைப்பை முடிக்கலாம் என்பதை கட்டுரையாசிரியர் நினைக்கவில்லை:
http://www.smithsonianmag.com/travel/the-hills-are-alive-with-the-sound-of-bollywood-180959035/?no-ist
[/stextbox]