தொழில்நுட்பம் vs. சட்டங்கள்

காவலன் தயாராகும் முன் கள்ளன் தயாராகி விட்ட நிகழ்வு நாட்டிற்கு நல்லதல்ல. உதாரணமாக சமீபத்தில், நடந்த தமிழக தேர்தலில், தேர்தல் ஆணையம் ஊடக விளம்பரங்கள் செய்வது மற்றும் அதற்கான செலவுக் கணக்குகளை ஆணையத்திடம் ஒப்படைப்பது குறித்து சுற்றறிக்கை ஒன்றை அறிவித்திருந்தது. அதில், ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்காகச் செய்யும் விளம்பரங்களில் ஆன்லைன் விளம்பரங்களும் அடங்கும். எனவே அதற்கான செலவுக் கணக்கையும் கணக்கில் கொண்டு வரவேண்டும் என்கிறது ஆணையம். ஆனால், ஆன்லைனில் விளம்பரம் எனில் ‘எவை ஆன்லைன்?” “எவை விளம்பரங்கள்?” “எவை ஆன்லைன் விளம்பரங்களுக்கான செலவு?” அந்தச் செலவுக் கணக்கை ”எப்படிக் கணக்கிடலாம்?” என பல கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் இன்னும் பதில் சொல்லவில்லை.